இத்தாலி இன அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் 2023

18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்டு வரும் தமிழ் மக்கள் நினைவாக இத்தாலியில் Palermo, Biella மாற்று Reggio Emilia நகரங்களில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

அவ் வகையில் Biella நகரில் சென்ற ஆண்டு Valdilana வில் Piazza XXV Aprile எனும் இடத்தில் நடுகையிட்ட மரம் மற்றும் நினைவு தடத்திற்கு முன்னராக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. Valdilana நகரசபையின் முதல்வர் Mario Carli மற்றும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் Valdilana வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன. வணக்கநிகழ்வுகளைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதைகள், தமிழின அழிப்பு தொடர்பாக இளையோர்களின் கருத்துகள், முதல்வர் Mario Carliயின் சிறப்புரை மற்றும் தமிழின அழிப்பு நாள் சிறப்புரை என்பன இடம்பெற்றிருந்தன. நிகழ்வின் இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டதுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்நது, Palermo நகரில் நகசரசபையின் அணுசரணையுடன் Giardino dei Giusti எனும் பூங்காவிலும், திலீபன் தமிழ்ச்சோலையிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

பூங்காவில் Palermo நகரசபையின் உறுப்பினர் Mancuso அவர்கள் அங்கு பதிவிட பட்ட  நினைவுதடத்தினை திறந்து வைத்தமையை தொடர்ந்த தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்களின் பங்கேற்புடன், வணக்க நிகழ்வுகள் தொடர்ந்தன. மேலும், திலீபன் தமிழ்ச்சோலையிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும், Reggio Emilia நகரில் வணக்க நிகழ்வுகள் Piazza Prompolini இல் இடம்பெற்றன. தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் Reggio Emilia வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளின் பொழுது துண்டுபிறச்சாரங்கள் வழங்கப்பட்டதும் பல்வேறு பல்லின மக்களுடன் தமிழின இனப்படுகொலை தொடர்பான விடையங்கள் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Genova நகரில் 20.05.2023 சனிக்கிழமை Stazione Brignole எனும் இடத்தில் 15:00 மணிக்கு நினைவு கூரப்பட்டது. Genova பிரதேசப் பணியாளர் திரு. தங்கவேலு சுதாகரன் முள்ளிவாய்க்கால் மக்களின் நினைவு சுமந்த சுடரை ஏற்றி வைக்க, அகவணக்கத்துடன் பாடல் இசைக்கப்பட்டு ஆசிரியர்கள், திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், பெற்றோர்கள், Genova வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தபடி பதாகைளுடன் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நடைபெற்றது. Napoli, Roma ஆகிய நகரங்களில் 20.05.2023 சனிக்கிழமையும், Bologna நகரில் 21.05.2023 ஞாயிற்றுக்கிழமையும்  திலீபன் தமிழ்ச்சோலை வளாகங்களில் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பணியாளர்களுடன் வணக்கநிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

Biella

Palermo

Reggio Emilia

Bologna

Genova

Roma

Napoli

உங்கள் கவனத்திற்கு