உறவை வளர்ப்போம் – தாயகத்தில் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்

தாயகத்தில் வளர்ந்து வரும் எமது மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி இத்தாலி வாழ் இளையோர்களால் 2020இல் உறவை வளர்ப்போம் எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் முதல் கட்டமாக கற்றல் உபகரணங்களை இத்தாலி வாழ் மக்களின் ஆதரவுடனும், திலீபன் தமிழ்ச் சோலைகளின் பங்களிப்புடனும் சேகரிக்கப் பட்டன. ஏனைய உபகரணங்கள் தாயகத்தை கடந்த மாதம், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தாண்டி, சென்றடைந்துள்ளன. ஒரு பகுதி உபகரணங்கள் மாங்குளத்தை அண்டிய கிராமங்களில் உள்ள மாணவர்களைச் சென்றடைந்த நிலையில், இந்த வாரம் வவுனியா மாவட்டத்தில் ஈஸ்வரிபுரம் முன்பள்ளியில் இருபது மாணவருக்கும் மற்றும் மறவன்குளம், தரணிக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஐம்பத்தொரு பாடசாலை மணவருக்கும்  ஏனைய கற்றல் ஊக்குவிப்புக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

எங்களுடை திட்டத்தின் பெயருக்கு அமை தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்களுக்கிடையே ஒரு வலுவான உறவை வளர்ப்பதுடன், மேலும் தாயக்தில் வளர்ந்து வரும் எமது இளம் தலைமுறை இலங்கை அரசாங்கம் தீவிரமாக் மேற்கொண்டு வரும் திசைதிருப்பும் திட்டங்களுக்கு உள்ளாகாது கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என நம்புகின்றோம். இத்திட்டம் சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிப்பதோடு, தொடர்ந்து நாம் முன்னெடுக்கும் திட்டங்களில் உங்கள் பங்களிப்பை எதிர்பார்கின்றோம். 

உங்கள் கவனத்திற்கு