மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு

தமிழீழத் தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக தம்முயிரைத் தற்கொடையாக்கி தமிழின மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் மாவீரப் புனிதர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் பலெர்மோ நகரில் இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணியகத்தில் நடைபெற்றது.  

தமிழீழத் தேசியத் தலைமையின் சிந்தனைக்கு அமைவாக அனைத்து மாவீரர் குடும்பங்களையும் மதிப்பளித்து, ஒவ்வொரு மாவீரர் பற்றிய நினைவுகளையும் மீண்டும் உயிர்ப்பித்து உறுதியெடுக்கும் உணர்வுபூர்வமான நிகழ்வாக இது அமைந்திருந்தது.

உங்கள் கவனத்திற்கு