தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக் கழகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022 நேற்றைய தினம் பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது. 

அகவை 5 முதல் 14 வரை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மாணவர்கள் இப் போட்டிகளில் பங்கேற்றுக்கொண்டனர். 

போட்டியின் விதிமுறைகளை கவனத்திற்கொண்டு நடுவர்கள் சிறந்தமுறையில் கடமையாற்றி வெற்றியாளர்களைத் தெரிவுசெய்தனர். 

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது சிறார்கள் தாயகப் பற்றுறுதியுடன் மாவீரர்களின் மகத்தான தியாகங்களை இம் மனனப்போட்டி ஊடாக வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு