அனைத்துலக அறிவாடல் போட்டி 2022

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையால் இணையவழியில் நேற்று அறிவாடல் போட்டிகள் நடாத்தப்பட்டது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நிர்வாகத்தின் கீழ், அந்தந்த நாடுகளின் கல்விக்கழகங்களின் நிர்வாக ஒழுங்கமைப்பில் செயற்படும் அனைத்து பள்ளிகளின் மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் முதற்சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றினார்கள். முதற் சுற்றில் இத்தாலியில் இருந்து தெரிவான 31 திலீபன் தமிழ்ச் சோலை மாணவர்களும் நேற்ற நடைபெற்ற போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்களிற்கு வழிகாட்டிய அறிவாடல் இணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரையும் இத்தாலி தமிழ்க் கல்விச் சேவை நன்றியுணர்வுடன் பாராட்டுகிறது.

உங்கள் கவனத்திற்கு