இறையாண்மையை மீட்டெடுக்க திரண்டெழுந்த ஈழத்தமிழினம்

ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை இனம் காட்டி, மக்கள் ஆணை வழங்காத 13ஐ நடைமுறைப்படுத்த முனையும் சக்திகளுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அறைகூவல் விடப்பட்ட போராட்டத்திற்கு, நேற்றைய தினம் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் ஆரம்பித்து யாழ் நகரமே அதிரும்படியாக வயது வேறுபாடின்றி கைக்குழந்தைகளுடன் கூட மக்கள் கலந்துகொண்டு வெற்றி பெறச்செய்தனர்.

இறைமையுள்ள தேசத்தை மீட்பதற்காக வாக்களித்த மக்களை ஏமாற்றி, சிறிலங்கா பேரினவாதத்தின் ஒற்றையாட்சிக்குள் அடங்கும் 13ஐ நடைமுறைப்படுத்தக்கோரி தமிழ் மக்களின் ஆணை பெறாமல் கையொப்பமிட்டு அனுப்பிய நகர்வுகளை எமது மக்கள் இன்றைய தமது பேரணியூடாக மிக்க தெளிவாக எதிர்த்ததோடு எமக்கான தீர்வு தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையே வேண்டுமென இறுமாப்புடன் உரிமைக்குரல் எழுப்பியுள்ளனர்.
இன்று இடம்பெற்ற இவ் வரலாற்று முக்கியம் வாய்ந்த பேரணிக்கு தாயகத்திலும், புலத்திலும் பல தமிழ் ஊடகங்கள் இருந்தாலும் சில ஊடகங்கள் மட்டுமே தமிழ் தேசியத்தின் இருப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து முக்கியத்துவம் கொடுத்திருந்தன. ஏனைய ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எமது மக்களின் அரசியல் இறையாண்மை மறுக்கப்படுவதையோ, இனவழிப்பு, போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர், நில அபகரிப்பு தொடர்பாக இன்றைய பல தமிழ் ஊடகங்கள் எழுத மறுப்பதைப்போன்று எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட இத்தனைப்பேசாமல் வாக்களித்த மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் செயலை மக்கள் ஆணை இல்லாமல் செய்ய அவர்கள் துணிந்ததை எதிர்த்து இன்று மக்கள் வீதியில் இறங்கி போராடியது அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையே.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

உங்கள் கவனத்திற்கு