இத்தாலி அரசாங்கத்தின் அவசர ஆணை

இத்தாலியில் கொரோனாவைரசின் நான்காவது அலையைத் தடுக்க முயற்சிக்கும் புதிய நடவடிக்கைகளைக் கொண்ட புதிய Covid-19 எதிர்ப்பு ஆணையை இத்தாலிய அரசாங்கம் விடுத்துள்ளது.
பிப்ரவரி 1 முதல், Super Green Pass (தடுப்பூசிக்குப் பிறகு பெறப்பட்டது) எனும் சான்றிதழின் கால அவகாசம் ஒன்பதிலிருந்து ஆறு மாதங்களாக குறைக்கப்படுகிறது.

சனவரி 10 முதல், தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. உள்ளூர் மற்றும் பிராந்திய பொதுப் போக்குவரத்துகளிலும் Super Green Pass அவசியம். விமானங்கள், கப்பல்கள், பேருந்துகள், tramகளில் கூட தடுப்பூசி போடாதவர்கள் பயணிக்க முடியாது.

Super Green Pass இல்லாமல், உட்புற மற்றும் வெளிப்புற உணவகங்கள் மற்றும் barகள், வெளியிலும் உட்புறத்திலும் அமைந்திருக்கும் திரையரங்குகள், கச்சேரி அரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், உட்புறம் அல்லது வெளியில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள், தங்குமிட விடுதிகள், சிவில் அல்லது மத விழாக்களைத் தொடர்ந்து நடைபெறும் விருந்துகள், திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகள், பனிச்சறுக்கு விடுதிகள், வெளிப்புற ஆரோக்கிய மையங்கள், வெளிப்புற கலாச்சார, சமூக மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், நீச்சல் மையங்கள் ஆகியவற்றுக்கான அணுகலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகள் மாற்றம் அடைகின்றன:

  • தடுப்பூசியின் கடைசி ஊசி அல்லது Covid -19 நோயிலிருந்து குணமாகி 4 மாதங்களுக்குள் இருந்தால், நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் இனி தனிமைப்படுத்தல் தேவையில்லை. ஆனால் 10 நாட்களுக்கு Ffp2 முகக்கவசத்தை பயன்படுத்தி, சுயமான ரீதியில் கண்காணிப்பு செய்து, நோய்த்தொற்றிற்கான அறிகுறிகள் இருந்தால் 5 நாட்களுக்குப் பிறகு ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
  • தடுப்பூசியின் கடைசி ஊசி அல்லது Covid -19 நோயிலிருந்து குணமாகி 4 மாதங்களுக்கு மேல் இருந்தால், நோய்த் தோற்று உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்பட்டால், 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தலை மேற்கொண்டு, 10 நாட்களுக்கு Ffp2 முகக்கவசத்தை பயன்படுத்தி, சுயமான ரீதியில் கண்காணிப்பு செய்து தனிமைப்படுத்தலுக்குப் பின் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
  • நோய்த் தோற்று உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்பட்டால், தடுப்பூசி போடாதவர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் இல்லை: 10 நாட்கள் தனிமைப்படுத்தலின் இறுதியில் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

நெருங்கிய தொடர்புகள் எவை?

  • ஒரே வீட்டில் வாழ்பவர்கள்;
  • நேரடி உடல் தொடர்பு கொண்டவர் (உதாரணமாக கைகுலுக்கல்);
  • 15 நிமிடங்களுக்கு மேல் 2 மீட்டருக்கும் குறைவான தொலைவில் மூடிய சூழலில் பாதுகாப்பு இல்லாமல் நேருக்கு நேர் தொடர்பு கொண்டவர்;
  • ஒரு தொடரூந்து அல்லது விமானத்தில் 2 இருக்கைகளுக்கும் குறைவான தூரத்தில் அமர்ந்து பயணிப்பவர்;
  • நேர்மறை நபர் அமர்ந்திருந்த விமானம் அல்லது தொடரூந்துப் பிரிவில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள்;
  • போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத சுகாதார பணியாளர்கள்.

இத்தாலி முழுவதிலும் வெளிப்புறங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுப் போக்குவரத்துகளில் Ffp2 முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் சனவரி 31, 2022 வரை வெளியிடங்களில் மக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் அபாயத்தைத் தடுக்கும் வண்ணம் அனைத்து விழாக்கள் மற்றும் கச்சேரிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

உங்கள் கவனத்திற்கு