ஐக்கிய நாடுகள் அவையினை வந்தடைந்த ஈருருளிப்பயணம்

சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவேண்டும் என்னும் வேணவாவோடு பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 19/09/2021 ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை (ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலை) வந்தடைந்தது.

காலத்தின் தேவை அறிந்து எம் தமிழ் உறவுகள் நாளை 20/09/2021 ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில் பி.ப 2.30 மணிக்கு நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற தவறாதீர்கள்.

«ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்»-தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு