“முள்ளிவாய்க்கால் கஞ்சி”

அனைவருக்கும் வணக்கம்!
தமிழினம் மறந்திட முடியாத வலிகளைச்சுமந்த மே18 எம் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் ஆறாத ரணங்களாய் உள்ளது.முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு தம்உயிரைக்காக்க உப்பில்லாத அரிசிக் கஞ்சியை பெறுவதற்காக காத்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிறீலங்கா இராணுவம் கொன்றொழித்தது.

இந்த கொடூரத்தை நாம் மறந்திட முடியாத மிகவும் வேதனை மிகுந்த தமிழினப்படுகொலையின் உச்சமாகும். இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தும் முகமாக இறுதி மூச்சை பிடிப்பதற்காக உண்ண உணவின்றி தவித்த அவலத்தை எளிமையான அந்த கஞ்சியை நாமும் குடித்து, அவர்கள் பட்ட துயரினை அனைவரும் அறிந்திடும் வகையில் இன்று சனிக்கிழமை (15/05/21) றெஜியோ, ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலைகளில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கப்பட்டு எம்மவரின் வலிகளை நினைவு கூரப்பட்டது. அவற்றின் சில பதிவுகள்!

உங்கள் கவனத்திற்கு