முன்னுரை

பொதுவாக, ஒருவர் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச் செய்வதே பல்பணியாக்கம் (multitasking) எனப்படுகிறது. குறிப்பாக, இன்றைய சமுதாயத்தில் செயற்கை நுண்ணறிவின் செயல்திறனை (கணினிகள்) மனிதன் சமநிலைப்படுத்த இது மிகவும் முக்கியமான ஒரு திறனாக கருதப்படுகிறது.

ஆனால், உண்மையில் செயற்கை நுண்ணறிவுடன் மனிதனால் போட்டியிட முடியுமா? மற்றும் இந்த பல்பணி எப்போதும் நேர்மறையானதா?

அன்றாட வாழ்க்கையில் இதன் விளைவுகள்

அன்றாட வாழ்க்கையில் நாம் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களை ஒரே நேரத்தில் செய்கிறோம். உதாரணமாக, பணியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்களை ஒன்றாக இயக்குவது; வீட்டில் படிக்கும்போது பாடல்கள் கேட்பது அல்லது ஓய்வு நேரத்தில், நடைபயிற்சி செல்லும்போது ஒலிப்புத்தகத்தைக் கேட்பது. இவை அனைத்தும் நேரத்தை மிச்சப்படுத்த அனுமதிப்பதோடு, ”அதிக ஆக்கவளம்” என்ற கருத்தை நமக்கு அளிக்கிறது. இருப்பினும், மனித மூளை, இயந்திரங்களைப் போலன்றி, வரையறுக்கப்பட்ட அறிவாற்றல் வளங்களையே கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த வரம்பினை அடைந்தவுடன் எங்களை அறியாமலே எமக்கு தெரியப்படுத்துகிறது. உதாரணமாக, பாடல் கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்டுகிறோம். ஒரு சிக்கலான வாகனத் தரிப்பு செய்ய நேரிடும்போது நம்மை அறியாமலே நாம் வானொலியின் ஒலியை குறைப்போம். நிச்சயமாக, இச் செயல் நாம் நன்றாக பார்ப்பதற்கு உதவாது ஆனால் எமது மூளை தானாகவே அதைச் செய்கிறது, ஏனென்றால் பாடல் கேட்பதற்கு இன்னும் சில கவனம் தேவைப்படுகிறது, இருப்பினும், அந்த நேரத்தில், முற்றிலும் வாகனத்தை தரிப்பதற்காக மட்டுமே அக் கவனம் தேவைப்படுகிறது.

மற்றொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், ​​ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடும்போது குழந்தைகளுக்கு மோசமாக பதிலளித்தல் அல்லது குழந்தைகள் வேறொன்றில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களிடமிருந்து மோசமான பதிலைப் பெறுவது. இத்தகைய நிகழ்வுக்கு காரணி என்னவென்றால், அந்த நேரத்தில் மூளை ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்துகிறது, மேலும் அது ஒரு வெளிப்புற இடையூறைப் பெறும்போது (எ.கா: பிறர் அழைப்பது), மூளை தானாகவே அவ் இடையூறினை எதிர்மறையான மற்றும் எரிச்சலூட்டும் ஒன்றாக இணைக்கிறது. இதன் விளைவாக உங்கள் அமைதியான மனநிலையை இழக்க நேரிடும்.

இந்த சூழ்நிலைகளில் எரிச்சலூட்டும் விதத்தில் பதிலளிப்பதற்கான உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். நீங்கள் தற்காலிகமாக வேறு பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதையும் பின்னர் நீங்கள் அவர்களிடம் உங்கள் நேரத்தை செலுத்துவீர்கள் என்பதையும் எடுத்துக்கூறுவது நல்லது. மறுபுறம், ஒரு கேள்வியை எழுப்புவதற்கு மிகவும் பொருத்தமான நேரத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், இதனால் நமது தேவைகளை மட்டுமல்ல, மற்ற நபரின் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேர்மறையான விடயங்கள்

பல்பணியின் மிகத் தெளிவான நன்மை நேரத்தை மிச்சப்படுத்துவது. இது பல நிலைகளில் நடக்கிறது, ஏனெனில் உங்கள் வேலைகளை முதலில் முடிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்காக அர்ப்பணிக்க அதிக நேரம் இருக்கும். இதனால் வேலை மற்றும் ஒரு தனிப்பட்ட கண்ணோட்டத்தில் நாள் முழுவதையும் வாழ்ந்தது போல் உணர்வு இருக்கும். அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடும்.
ஒரு நேரத்தில் ஒரு பணியைச் செய்வதை விட, ஒருவரின் செறிவு அனைத்தும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அர்ப்பணிக்கப்படும் என்பதால் கைத்தொலைபேசி அல்லது பிறவற்றால் இருந்து கவனம் திசைதிரும்புவதற்கு வாய்ப்பு இருக்காது,

எதிர்மறையான விடயங்கள்

ஏற்கனவே கூறியது போல், நம் மூளைக்கு வரையறுக்கப்பட்ட அறிவாற்றல் வளங்கள் உள்ளன என்பதால் பல்பணி மூலம் இந்த வரம்பு முன்னரே எட்டப்படுகின்றது. இதில் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் பணிகள் தரத்தால் பாதிக்கப்படுகின்றன. உண்மையில், ஒரு நேரத்தில் ஒரு பணியைச் செய்யும்போது மட்டுமே அனைத்து அறிவாற்றல் வளங்களையும் அதற்கு அர்ப்பணித்து தரத்தின் அடிப்படையில் சிறந்த முடிவைப் பெற முடியும். மற்றொரு எதிர்மறையான அம்சம் Sandra Bond Chapman ஆராய்ச்சியால் அடையாளம் காணப்பட்டது. அதாவது
பல்பணியாக்கம் நம் உடலுக்குள் அழுத்த நிலையை கணிசமாக அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றது.

இதை எவ்வாறு மேம்படுத்துவது

பல்பணியாக்கம் என்பது ஒரு உள்ளார்ந்த திறன் அல்ல, அது
படிப்படியாக வளர்ச்சி பாதையில் பெறப்பட்டு அனுபவத்தின் மூலம் மேம்படுத்தப்படும் ஒரு திறமை.
எடுத்துக்காட்டாக, முதல் தடவைகள் வாகனத்தை ஓட்டும் போது வானொலியைக் கேட்பது போன்ற கவனச்சிதறலை தவிர்த்து சாலையில் முழுமையாக கவனம் செலுத்தப்படும். ஆனால் சிறிய பயிற்சி மூலம் இயற்கையாகவே வாகனம் ஓட்டும் போது மற்ற பயணிகளுடன் உரையாடல்கள் மேற்கொள்ள முடியும். ஏனென்றால், சிறு பயிற்சி மூலம், குறிப்பிட்டச் செயலை செய்வதற்கு அறிவாற்றல் வளங்கள் குறைந்து, மூளை வளங்களின் வரம்பை மீறாமல், மற்றொரு பணியை சமகாலத்தில் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது.

முடிவுரை

எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய சமூகத்தில், முக்கியமாக பல பணிகளை செய்யக்கூடிய பணியாளர்களை பணியமர்த்துவதற்கான போக்கு அதிகரித்து வரும் பணியிடத்தில், பல்பணியாக்கம் என்பது மிக முக்கியமான திறமையாகும். ஆனால், ஒவ்வொரு பணிகளை அணுக ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு வழி உள்ளது என்பதையும் மனிதர்கள் ஒரு போதும் ஒரு இயந்திரத்தின் செயல்திறனுடன் ஒத்தவையாக இருக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம் ஆகும். இருப்பினும், நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது என்ற அறிவுடன், எங்கள் பல்பணி திறன்களை மேம்படுத்தி அதைப் பயன்படுத்தவும் முடியும். அவற்றைப் புரிந்துகொள்வதற்கும் பிரதிபலிப்பதற்கும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். உங்களுக்கு மேலும் தெளிவு தேவைப்பட்டால், உங்களிடம் வேறு கேள்விகள் இருந்தால் அல்லது நீங்கள் ஒருவரிடம் கதைக்க வேண்டும் என்றால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்.

உங்கள் கவனத்திற்கு