“உறவை வளர்ப்போம்” – வாகை இலவசக் கல்வி நிலையம்

தாயகத்திற்கும் புலத்திற்கும் ஒரு உறவு பாலத்தை உருவாக்கும் நோக்கோடு இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட “உறவை வளர்ப்போம்” திட்டத்தை அனைவரும் அறிவீர்கள்! இத் திட்டத்தின் வெளிப்பாடாக நேற்று, 21.02.2021, இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில், வவுனியா சிதம்பரபுரத்தில் உருவாக்கப்பட்ட வாகை இலவசக் கல்வி நிலையத்தின் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. சர்வதேச தாய்மொழி தினமாகிய நேற்றே இக் கல்வி நிலையம் திறக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் திரு.செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கல்வி நிலையத்தை திறந்துவைத்தார்கள். நிகழ்வின் சில ஆவணங்கள் இங்கே.