ஈழத்தமிழர்கள் முதல் முறையாக இறைமை இழந்த வரலாறு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 4

கோட்டையரசைக் கைப்பற்றும் போர்த்துக்கேயர் முயற்சிக்கு எதிராக,கோட்டைச் சிங்களவர்களுக்குச் சார்பாகப் போர்க் கொடிதூக்கியது முதலாம் சங்கிலிய மன்னனது யாழ்ப்பாணஅரசு. வேற்று இனமாக இருந்த போதிலும் ஒரு தீவுக்குள்ளே வாழ்ந்த ஒருமைப்பாட்டு உணர்வினால், உதவிவந்த யாழ்ப்பாணத் தமிழரசின் முதுகிலே குத்தியது அன்றைய சிங்கள ஆட்சி வெறியர்கள்தான். தம்மைத்தாமே அடிமைப்படுத்திக் கொண்டது மட்டுமன்றி, சிங்களக் கூலிப்படைகளாகப் போர்த்துக்கேயப்படைகளுக்குத் தமிழரசைப் போர்த்துக்கேயர் வீழ்ந்த அவர்கள் பேருதவி புரிந்தனர்.
போர்த்துக்கேயர் கால இலங்கை வரைபடம்
தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கிலே விரிந்து பரந்திருந்த யாழ்ப்பாணத் தமிழரசு, அண்டை அரசுகளான கண்டி அரசினாலே, கோட்டை அரசினாலோ போரிலே வீழ்த்தப்படவில்லை. போர்த்துக்கேயரிடந்தான் யாழ்ப்பாணத் தமிழரசு தனது இறைமையை 1619 இல் இழந்தது.
போர்த்துக்கேயரிடமும், தொடர்ந்து வந்த ஒல்லாந்தரிடமும், கண்டி அரசு தனது இறைமையை இழக்கவில்லை. அதன் புவியியற் சூழல் அதனைக் காப்பாற்றி இருந்தாலும், கண்டி ஆட்சிப் பகுதி 1815 இல், இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட ஆங்கிலேயர் கையகம் சென்றது. அந்த வீழ்சிக்கும் சிங்கள மேல் மட்டத்தின் காட்டிக் கொடுப்புக்களே காரமாயின என்பதை இலங்கையின் பிற்கால வரலாறு தெளிவாகச் சொல்கிறது. கண்டி அரசு ஒரு பௌத்த சிங்கள அரசாக இருந்த போதும், அதனை கி.பி 1739 முதல் 1815 வரை 76 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள்தான்.

உங்கள் கவனத்திற்கு