சீனா மீது US மாநிலம் வழக்கு தாக்கல் – அமெரிக்கா பற்றிய முக்கியமான செய்திகள்

USA வில் இதுவரை 8லட்சத்தி 24 ஆயிரம் மக்கள் தொற்றுக்குள்ளாகி இருப்பதோடு, 45.343 நபர்கள் கொரோனாவைரசால் உயிரிழந்துள்ளனர். அதிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 2700 நபர்கள் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சத்தில் மத்தியிலும் மாநிலங்கள் மீண்டும் திறக்கத் தயாராகி வருகின்றன

பல அச்சத்தில் மத்தியிலும் Trump க்கு ஆதரவாக இருக்கும் பல அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் திறக்கத் தயாராகி வருகின்றன. இவ்வாறான பாதுகாப்பான முறையில் மீண்டும் திறக்கும் திட்டங்களை 20 மாநிலங்கள் அறிவித்துள்ளன.

“சுரங்கப்பாதையின் அடிப்பகுதியில் நான் ஒரு ஒளியைக் காண்கிறேன். அமெரிக்கர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள் ” என்று Trump Twitterஇல் கூறியுள்ளார்.

நிரந்தர வதிவிட அனுமதியை (green card ) Trump நிறுத்தியுள்ளார்

மேலும், சனாதிபதி Trump குடியேற்றங்களை 60 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளார். அதாவது, நிரந்தர வதிவிட அனுமதியை (Green card) நிறுத்தியுள்ளார்.

கடந்த வருடத்தில் வேலைகளுக்காக சுமார் 4.5 லட்ச மக்கள் வெளிநாடுகளிலிருந்து US நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுளார்கள். குடியேற்றத்தை தடைசெய்வதன் மூலம் இந்த அவசரநிலையில் வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை கொடுக்க இயலும் என்று சனாதிபதி Trump தெரிவித்துள்ளார்.
தற்காலிக பணி விசாக்களுக்கு இந்த தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு எதிராக Missouri மாநில அரசு வழக்குத் தாக்கல்

இதற்கிடையில், Missouri மாநிலத்தில் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி Eric Schmitt மனித உயிர்களின் இழப்புகள் மற்றும் கொரோனா வைரசால் மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள் குறித்து சீன அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சீனாவுக்கு எதிராக ஒரு அமெரிக்க மாநில அரசு தாக்கல் செய்த முதல் வழக்கு இதுவே ஆகும்.
Beijing அரசாங்கம், சீன பொதுவுடைமை கட்சி மற்றும் பிற சீன நிறுவனங்கள் தகவல்களை மறைத்து, வைரசின் “தன்மையை” மறுப்பதாகவும், மேலும், Missouriயில் கடுமையான விளைவுகளுக்கு சீன அரசாங்கமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்: சனாதிபதி அறிவுரைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்!

கடந்த வாரங்களில் hydroxychloroquine மற்றும் azithromycin மருந்துகளை பல இடங்களில் சனாதிபதி Trump COVID-19 நோயை எதிர்ப்பதற்கு தரமான மருந்துகள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான வாக்குமூலங்களை தொடர்ந்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (US Health Agency) சனாதிபதியின் பேச்சைக் கேட்டு இந்த இரு மருந்துகளின் கலவையுடன் சிகிச்சையளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒரு ஆய்வின் படி, மலேரியா எதிர்ப்பு மருந்து hydroxychloroquine மற்றும் azithromycin ஆகியவற்றின் கலவை நச்சுத்தன்மையுடையதாக இருக்கும் என்று கூறுகிறது. நஞ்சேற்றம் உட்பட பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கவனத்திற்கு