சிகிச்சை பெற்றுவந்த சீன மருத்துவர்களின் தோல் கருப்பு நிறமாக மாறியுள்ளது.

கொரோனாவைரசால் பாதிக்கப்பட்ட சீன மருத்துவர்கள்

கொரோனா தொற்றினால் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட இரண்டு சீன மருத்துவர்கள் ஆழ்மயக்கத்திலிருந்து (coma) இருண்ட நிற தோலுடன் விழித்திருக்கிறார்கள். இதனை சீன அரசுத் தொலைக்காட்சி ஒரு பதிவூடாக வெளியிட்டுள்ளது.

42 வயதுடைய Yi Fan மற்றும் Hu Weifeng ஆகிய இந்த இரு மருத்துவர்களும் கொரோனாவைரசு நோயின் தொடக்கங்களிலேயே Wuhan நகர வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சிகிச்சைகளில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இவர்கள் முதன் முதலில் கொரோனாவைரசுக்கான எச்சரிக்கையை விடுத்து, பின்னர் பெப்ரவரி 7 தொற்றினால் உயிரிழந்த Li Wenliang மருத்துவரின் சக பணியாளர்கள் ஆவார்கள்.

இந்த இரு மருத்துவர்களும் 18 சனவரி அன்று தொற்றுக்குள்ளானார்கள். இப்படியான அசாதாரண தோல் நிறத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு மருந்து அல்லது இயக்குநீரின் (Hormone) ஏற்றத்தாழ்வுகளால் ஈர்க்கப்பட்ட கல்லீரலின் காரணமாக இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் ஊகிக்கின்றனர். மேலும், கல்லீரலின் சாதாரண செயல்பாடுகளை மீட்டெடுக்கும்போது இருவரின் தோல் நிறம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அவர்களின் மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தற்போது, இருதய சிகிச்சை நிபுணரான Yi Fan 39 நாட்களாக செயற்கை முறையில் உயிர்காக்கும் கருவியூடாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உடல்நலம் தேரி வருகிறபோதிலும், அவரால் இன்னும் எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார். சிறுநீரக மருத்துவர் Hu வின் நிலை மிகவும் கடுமையாக உள்ளது. 99 நாட்களாக படுக்கையில் இருக்கிறார், அவரது உடல்நலம் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Trieste பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் மற்றும் இத்தாலிய மருந்தியல் அமைப்பின் நிபுணர் Gianni Sava விடம் இதைப் பற்றி கேட்டபோது: சீனாவில் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிற மருந்துகளில் clorochina எனப்படும் மருந்தே இப்படியான உயர்நிறமூட்டலுக்கு (iperpigmentazione) காரணியாக இருக்கக்கூடும். «நாம் அவசரநிலையில் அவசரமாக, பல மருந்துகளை ஒவ்வொன்றுக்கொன்று இணைக்கும் போது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய “பாதகமான நிகழ்வுகள்” ஏற்படலாம்: அதைத் தான் “கல்லீரல் மஞ்சள் காமாலை” என்று அழைக்கின்றோம். அப்போது தோல், மேலும் மஞ்சள், இருண்ட, அதிக மங்கிய நிறமாக மாறும். ஆனால் அந்த புகைப்படங்களில் காணப்படுவது போல் கருப்பு நிறமாக மாறுவதில்லை. ஆகையால், என்ன செய்யப்பட்டுள்ளது என்று தெரியாமல் கூடுதல் விவரங்களை கொடுக்க முடியாது» என்று அவர் கூறியுள்ளார்.

உங்கள் கவனத்திற்கு