நாள்தோறும் புள்ளிவிபரங்களின் பத்திரிகை சந்திப்புகளில் மாற்றம்

சிவில் பாதுகாப்புத்துறை தலைவர் Angelo Borrelli

பெப்ரவரி 22 ஆம் திகதியில் இருந்து இத்தாலி சிவில் பாதுகாப்புத் துறை கொரோனா வைரசின் தாக்கத்தின் அன்றாட புள்ளிவிபரங்களை நாள்தோறும் மாலை 18:00 மணிக்கு பத்திரிக்கை சந்திப்பு ஊடாக வெளியிட்டு வந்தது. இனி வரும் காலங்களில் பத்திரிகை சந்திப்பு திங்கள் மற்றும் வியாழன் என்று வாரத்திற்கு இரு முறைகள் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

“தொடர்ந்து வெளியிட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இன்று மருத்துவமனைகளில் இருந்த அழுத்தம் எளிதாகியுள்ளது என்று காண முடிகிறது. இந்த நிலை சுகாதார பணியாளர்களின் கடும் முயற்சியாலும் மற்றும் மக்களின் ஒத்துழைப்பாலும் மட்டுமே எட்ட முடிந்தது. அழுத்தங்கள் தளர்த்தப்பட்ட நிலையில் எங்களுடைய பத்திரிகை சந்திப்புக்கள் வாரத்திற்கு இரு முறை மேற்கொள்ளப்படும் என்றும் புள்ளிவிபரங்களை தினமும் இணையத்தளம் ஊடாக வழங்குவோம்” என்றும் சிவில் பாதுகாப்புத்துறை தலைவர் Angelo Borrelli தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் புள்ளிவிபரங்கள் தொடர்ச்சியாக தமிழ் தகவல் மையத்தில் வெளியிடப்படும் என்றும் உறுதி அளிக்கின்றோம்.

உங்கள் கவனத்திற்கு