31 மார்ச் இத்தாலிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்.

கொரோனா வைரசால் உயிரிழந்த மக்களுக்காக 31 மார்ச் இத்தாலி முழுவதும் துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்த மக்களுக்காக 31 மார்ச் இத்தாலி முழுவதும் துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரசபை தலைவர்களும் 12 மணிக்கு அலுவலகங்களுக்கு முன் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தும்படி கேட்கப்பட்டுள்ளார்கள். அன்று இத்தாலி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என்று பிரதமரின் துணைச்செயலாளர் Fraccaro வெளியிட்ட அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தின் துக்கத்தை வெளிக்காட்டுவதற்காகவும் மற்றும் வைரசின் தாக்கத்தால் அதிகூடிய விலை கொடுத்த மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கவனத்திற்கு