இத்தாலி முதல் கொரோனா வைரசு நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பைப் பற்றி ஒரு ஆய்வு.

5 நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட படம்
5 நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட படம்
5 நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட படம்
முதல் X-Ray படம்
முதல் X-Ray படம்
கொரோனா வைரசு நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு

Covid -19ஆல் பாதிக்கப்பட்டு, ரோமில் உள்ள “Spallanzani” மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதல் இரண்டு சீன நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு பற்றி ஒரு ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது. தொற்று நோய்களுக்கான சர்வதேச இதழில் (International Journal of Infectious Diseases) அடுத்து வரவிருக்கும் வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கும் படங்கள் மூலம், இரண்டு நோயாளிகளுக்கும் சொந்தமான நுரையீரல் சி.டி ஸ்கானின் (Tac) படங்கள் மற்றும் ஊடுகதிர் படமெடுப்புக்களின் படங்கள் (Radiografie) காட்டப்படுகின்றன.

இத்தாலியில் விடுமுறைச் சுற்றுலாவிற்கு வந்திருந்த 67 வயதான ஆணும், 65 வயதான பெண்ணும், குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, ஆனால் உயர் இரத்த அழுத்தத்திற்கு (Ipertensione) எதிரான வாய்வழி சிகிச்சைக்கு (Terapia orale) மட்டுமே உள்ளாகியிருந்தார்கள். சுவாசப் பிரச்சினைகள் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகளை அடையாளம் அளித்த பின்னர், இருவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்,இதன் மூலம் இவர்களுக்கு SARS-COV-2 வைரசு தொற்றியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், வயது வந்தோருக்கான சுவாசக் கோளாறு நோய் (ARDS) வரும் அளவிற்கு அவர்களின் தொற்றுநோய் அதிகரித்துள்ளது. நான்கு நாட்களுக்குள் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரண்டு நோயாளிகளும் மருத்துவ இயந்திர காற்றோட்டம் (ventilatore) உதவியுடன் மட்டுமே சுவாசித்தனர்.

இருவருக்கும் முதல் எடுக்கப்பட்ட ஊடுகதிர் படமெடுப்புக்களில் (radiografie) “ஒளி புகாத தெளிவற்ற கண்ணாடிப் போல்” தோன்றியது. அதாவது, நுரையீரலின் காற்றுள்ள இடங்கள் முழுவதும் கூடுதலாக சீழ் (pus), இரத்தம் அல்லது தண்ணீரைக் கொண்ட நீரால் நிரம்பியிருந்தது.
ஒளி புகாத தெளிவற்ற கண்ணாடி என்பது பொதுவாக உடலின் மென்மையான திசுக்களின் (tessuti molli) வீக்கத்திற்கு இணைகிறது. இது
நுரையீரலின் ஒருங்கிணைப்பாக அறியப்படுகிறது.(consolidamento)

சுவாசப்பையின் சிறிய அறைகளின் சுவர்கள் தடித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது (Setto interlobulare). இதயத்திலிருந்து நுரையீரலுக்குப் போகும் இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த நரம்புகள் சுவாசிப்பதற்காக விரிவடைந்துக்கொண்டிருந்தது என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது, அதாவது ஈபர்துரோபியா (ipertrofia) என்ற நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருந்தது என்பதை வெளிப்படுத்தியது.
ஈபர்துரோபியா (Ipertrofia) என்பது காற்று போவதற்கான இடத்தைக் குறைத்து சுவாசிப்பதைக் கடினமாக்கும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பொது நுரையீரலின் எடுக்கப்பட்ட முதலாவது X-ray படம்
முதலாவது X-ray படம் எடுத்து 5 நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட படம்

உங்கள் கவனத்திற்கு