ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் 30 நாட்களுக்கு அனைத்து அத்தியாவசியமற்ற நுழைவுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை!

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் மக்கள் அத்தியாவசியம் இன்றிப் பிரவேசிப்பதற்கு தொடர்ந்து 30 நாட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தடைவிதித்துள்ளார். “இந்த பயணங்களைத் தவிர்த்தால் தான் கொரோனா வைரசின் அபரிமிதமான பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும்” என்றும் இதனை ஏனைய நாட்டுத் தலைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பிரேரணையை ஊர்சுலா வொன் டெர் லேயன் (Ursula van der Leyen) முன்மொழிந்தார்.
இந்த குறுகிய கால 30 நாட்கள் தேவையேற்படின் நீடிக்கப் படலாம்.
இதன் விதிவிலக்குகள் :

  1. ஐரோப்பிய பிரசைகளின் குடும்ப உறுப்பினர்கள்;
  2. அந்தந்த நாட்டு தூதரக ஆணையாளர்கள் மற்றும் தூதரகப் பணியாளர்கள்;
  3. Covid-19 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள்.

மார்ச் 17 செவ்வாய்கிழமை தொலை தொடர்பு ஊடக மகாநாட்டில் அவர் ஏனைய ஐரோப்பிய உறுப்பு நாடுகளுடன் பேசி உட் துறை அமைச்சும் போக்கு வரத்துத் துறை அமைச்சும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மறுநாளே இது கைச்சாத்திடப் படும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே இலகுவாக அத்தியவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் பாதுகாப்பான முறையில் சென்றடைய வேண்டும்.
ஏற்கனவே அவர் 56 நாட்டு சுகாதார அமைச்சுகளுடன் Covid-19 வைரசின் ஐரோப்பிய பரம்பல் பற்றி தொலை தொடர்பு ஊடக மகாநாட்டில் கூறியுள்ளார்.

ஜேர்மனி, பிரான்ஸ் மட்டுமல்ல ஓளஸ்திரியா, உங்கரீயா, சேக்கொக் குடியரசு, டென்மார்க், பொலோனியா, லித்துவானியா, சுவிஸ் போன்ற நாடுகளும் தமது எல்லைகளை மூடுவது பற்றி புறூக்‌ஷல்ஸ்க்கு (Bruxelles) அறிவித்திருந்தன.

சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சுகளுடனான மகா நாட்டில் திறமையான ஆணையாளர்கள் குழு “25 குறிப்பு வழிகாட்டி” ஒன்றை வெளியிட்டது.
குடிமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கவும் சமுக உட் சந்தைகளின் செயற்பாடுகளுக்காகவும் இவ் வழி காட்டி வெளியிடப்பட்டது.

குறிப்பாக ஜேர்மன், பிரான்ஸ் நாடுகள் சுவாசத்தடுப்புறைகள், சுகாதார உபகரணங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதித்திருந்தன. ஆனால் இந்தத் தடையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடியாது எனவும் Covid-19 கொரோனா வைரசு காலத்திற்கான நுரையீரல் காற்றோட்ட இயந்திரம், மற்றும் பிற சுகாதாரப் பொருட்களை கூட்டுக் கொள்வளவு செய்வதும் இதனால் இவை ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் (இத்தாலி) உதவியாக இருக்கும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

உங்கள் கவனத்திற்கு