தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் இத்தாலி

றெஜியோ எமிலியா, நாப்போலி நகரங்களில் இன்று தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபற்றன. றெஜியோ எமிலியா நகரத்தில் பொதுச்சுடரேற்றப்பட்டு தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழின அழிப்பு தொடர்பான பதிவுகளுடன் வேற்றின மக்களுக்கான பரப்புரையும் இளையோர்களால் மேற்கொள்ளப்பட்டது. இன அழிப்பில் இறந்த மக்களுக்கான வணக்க நிகழ்வில் மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். நாப்போலி நகரில் திலீபன் தமிழ்ச்சோலையில் ஆசிரியர்கள் மாணவர்களால் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது. பொதுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

Reggio Emilia

Napoli

உங்கள் கவனத்திற்கு