நாளை 2020ஆம் ஆண்டின் கோடைக்கால நேர மாற்றம்.

28 – 29 இடையிலான இரவில், நிலையான நேரத்திலிருந்து கோடை நேரத்திற்கு மாற்றப்படும். எனவே, கடிகார முற்களை 60 நிமிடங்கள் முன்னோக்கி வைத்திருக்க வேண்டும்.

கோடை நேர மாற்றத்தின் பொழுது கிடைக்கக்கூடிய சூரிய ஒளியின் வெளிச்சத்தை அதிகம் பயன்படுத்தவும் மின்சாரப் பாவனையைக் குறைக்கவும் 1966 இல் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கு ஒரே மாதிரியான நேர மாற்றத்தை நடைமுறைக்கு அமுல்படுத்தியது.

ஆனால் சமீப காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த நேர மாற்றத்தை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் தென் ஐரோப்பா நாடுகள் (Spagna, Portogallo) தனது மறுப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவின்படி ஒவ்வொரு நாடும் தங்களுடைய நாட்டுக்குள் எந்த நேர முறையைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.

இவ்வாறான சூழல் அமைந்தால், கொரோனாவைரசால் பிளந்து இருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் நேரத்திலையும் ஒற்றுமையின்றி இருக்கப் போறார்கள்.

உங்கள் கவனத்திற்கு