மாவீரர் நாள் 2021

“எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது. நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்” 

– தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்

தாய்மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழராகிய நாம்
தமிழரின் அடையாளம், இனவழிப்பு உட்பட பல விடயங்களில் பட்டறிவுபெற்ற தமிழ் இளையோர்களின் அர்ப்பணிப்பாலும் விடாமுயற்சியினாலும் தற்போதைய சூழலில் உச்ச பயன்பாட்டிலுள்ள சமூகவலைத்தளங்களூடாக பல்வேறு வகையான தேசியம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.
காலச் சுழற்சிக்கேற்ப தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, வளர்ந்துவரும் எமது இளஞ்சிறார்களுக்கு தமிழர் வரலாறு சார்ந்த அறிவையூட்டும் முகமாகவும், அவர்களது திறனையும் கற்பனைவளத்தையும் ஊக்குவிக்கும் நோக்குடனும் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.
அந்த வகையில், தமிழீழத் தேசிய மாவீரர்நாளை முன்னிட்டு இத்தாலிவாழ் ஈழத்தமிழ் சிறார்கள் வெளிப்படுத்திய ஆக்கங்களை இங்கே காணலாம்!

பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலை

உங்கள் கவனத்திற்கு