பலெர்மோவில் நடைபெற்ற மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் 2020

பலெர்மோவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் ஈழத்தமிழர் விளையாட்டுச் சம்மேளனம் நடாத்திய 2020ம் ஆண்டுக்குரிய மாவீரர் வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகள் 01/08/2021 ஞாயிறு அன்று A.S.D FINCANTIERI மைதானத்தில் நடைபெற்றிருந்தன. கடந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரிவியிருந்த காரணத்தால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இச் சுற்றுப்போட்டிகள், கொரோனா விதிமுறைகளுக்கிணங்க இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தன. காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகிய இப் போட்டிகளில் ஈழத்தமிழர் விளையாட்டுச் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 7 கழகங்கள் பங்கேற்றிருந்தன. றியல் பிரண்ட்ஸ் மற்றும் சென் அன்ரனீஸ் ஆகிய இரு கழகங்களும் இறுதிச்சுற்றிற்குத் தெரிவாகியிருந்த நிலையில், றியல் பிரண்ட்ஸ் அணி வெற்றிபெற்று 2020ம் ஆண்டுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டது. மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் கலந்துசிறப்பித்த விளையாட்டுக் கழகங்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள், சிறந்த விளையாட்டுவீரருக்கான கேடயம், சிறந்த பந்துக்காப்பாளருக்கான கேடயம் என்பன வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலிய தேசியக்கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுற்றன.

உங்கள் கவனத்திற்கு