கட்டம் 2: நகரங்களில் உருவாகிய பெரும் கூட்டங்கள்

Palermo, Vucciria சந்தையில் ஏற்பட்ட கூட்டங்கள்

இத்தாலி முழுவதும் முடக்கநிலை தளர்த்தப்பட்டதோடு, மதுக்கடைகள் மற்றும் இரவு கிளப்புகள் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், கொரோனாவைரசு எதிர்ப்பு விதிகளை மதிக்கும் அதே வேளையில், பலர் நகரங்களுக்குள் கூட்டம் கூட ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலும் குடிமக்களால் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன, இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், முகக்கவசங்கள் இல்லாததாலும், ஒருவருக்கொருவர் தூரத்தைக் கடைப்பிடிக்காததாலும் குழப்பத்தையும் சர்ச்சையையும் தூண்டியுள்ளது.

உதாரணமாக, Padovaவில் எல்லாவற்றையும் மறுபடியும் மூடுவதற்கு தயாராக இருப்பதாகவும், நோய்த்தொற்றுகள் அதிகரித்தால், மதுக்கடைகள், உணவகங்கள் மற்றும் கடற்கரைகளை மூடுவதாகவும், திரும்பவும் வீட்டிற்குள் மூடக்கப்படுவதாகவும் Veneto பிராந்திய ஆளுநர் Luca Zaia கூறியுள்ளார்

Palermoவிலும் இப்படியான கூட்டங்கள் Vucciria எனும் சந்தையில் ஏற்பட்டுள்ளன. இங்கு காவல்துறையினரின் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, Vucciria சந்தை, Piazza Sant’Anna மற்றும் Piazza Monte di Pietà ஆகிய 3 இடங்களில் ரோந்துப் பணிகளை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், நகரத்தின் முழுப் பகுதிகளையும் மூடுவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் இந்தக் கட்டாயத்திற்கு மக்கள் கொண்டுவர மாட்டார்கள் என்று நம்பிக்கை உள்ளதாகவும் பலெர்மோ நகரத்தின் தலைவர் Leoluca Orlando அறிவித்துள்ளார்.

பிரதம அமைச்சர் Giuseppe Conte இவ் விடயம் சம்மந்தமாக: “ஒன்றைத் தெளிவுப்படுத்துவோம், இது கூட்டங்கள் கூடி கொண்டாடுவதற்கான நேரம் அல்ல. நாங்கள் கவனமாக இல்லாத பட்சத்தில் நோய்ப்பரவு வளைவு மீண்டும் உயர்ந்து விடும்” என எச்சரித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலைகளைச் சமாளிக்க காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளனர். காவல்துறை அதிபர் Franco Gabrielli இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தாலி முழுவதிலும் அமைந்திருக்கும் காவல்
நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் மக்கள் கூட்டங்கள் கூடுவதை தடுப்பதற்காகவும் சமூக தூரத்தைக் கடைப்பிடிப்பதற்காகவும் ஒவ்வொரு நகரமும் தகுந்த நடவடிக்கைகளை மேம்படுத்த அறிவிப்பு விடுத்துள்ளார்.

உங்கள் கவனத்திற்கு