“19-20 மார்ச்-இல் இருந்து தொற்று நோயின் பரவுதல் வேகம் குறைந்து கொண்டு வருகிறது” உயர் சுகாதார நிறுவனம்.

இன்று உயர் சுகாதார நிறுவனத் (Istituto Superiore di Sanitá – ISS) தலைவர் Silvio Brusaferro Romaவில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் மாநில அரசாங்கங்களால் வழங்கிய தகவல்களுடன் தயார்படுத்திய முதலாவது கொரோனாவைரசு பரவுதல் சார்ந்த அறிக்கையை வெளியிட்டார். இச் சந்திப்பில் உயர் சுகாதார அவையின் (Consiglio Superiore di Sanitá) தலைவர் Franco Locatelli வும் கலந்து கொண்டார்.

“உச்சக் கட்டம் என்னும் வரவில்லை, ஆனாலும் பரவுதலின் வேகம் குறைந்திருப்பது தெரிகிறது” என்று Brusaferro தெரிவித்துள்ளார்.

உச்சக் கட்டம், பரவுதல் வளைவு தெரிந்து கொள்வதற்கு.

மேலும் “19-20 மார்ச் தொடக்கத்தில் இருந்து பரவுதல் வளைவின் உயர்வு குறைத்துகொண்டு வருகிறது. இதை தொடர்ச்சியாக நாங்கள் காண்காணித்து வருகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

“இத்தாலியில் கொரோனாவைரசு பரவுதலின் உச்சக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். விதிக்கப்பட்ட நெறிமுறைகளை எளிதாக ஆக்குவதற்கு அவசரப்படக்கூடாது. இத்தாலி முழுவதும் ஒரே நிலைமையில் உள்ளது என்று இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரமும் வேறுபட்டது. வைரசின் பரவுதலால் பாதிக்கப்படாத மாநிலங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இது தான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.”

“கவனத்தில் எடுக்க வேண்டியது என்னவென்றால், பரவுதலின் வேகம் தான் குறைந்திருக்கிறது. பரவுதல் நிறுத்தப்படவில்லை” என்றும் Brusaferro சுட்டிக்காட்டினார்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 60க்கு மேற்பட்டதாக உள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 60க்கு மேற்பட்டதாக உள்ளது. “இறந்தவர்களின் 80% வீதமான நபர்கள் 70 வயதிற்கு மேற்ப்பட்டவர்களாக இருந்தார்கள். இந்த உயிரிழப்புகளில் சிலருக்கு முக்கிய காரணமாகவும் மற்றும் பலவீனமாக இருந்த நபர்களின் உயிரிழப்புக்கு முக்கிய பங்காகவும் இந்த COVID-19 நோய் அமைந்துள்ளது.”

“கொரோனாவைரசு ஆண்களை தான் அதிகமாக பாதிக்கின்றது. இத்தாலியில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் இதை காணமுடிகிறது. COVID-19 நோயை எதிர்ப்பதற்கு பெண்கள் மற்றும் சிறார்களின் நோயெதிர்ப்பு சக்தி ஆண்களின் விட சிறந்ததாக தெரிகிறது. இந்த நோயை பற்றி அறிவதற்கு இது முக்கிய விபரமாக உள்ளது.”

சுகாதார பணியாளர்களை பாதுகாக்கவேண்டும் .

“COVID-19 க்கு எதிரான போரில் இன்று எங்களுக்கு அளவில்லாத சொத்து என்றால் எங்கள் சுகாதார பணியாளர்கள் தான். அவர்களுக்கு தரமான பாதுகாப்புகளை கொடுக்க வேண்டும்” என்று Brusaferro வலியுறுத்தினார். தொடர்ந்து “வயோதிபர் இல்லங்களை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த இடங்களில் தான் வைரசால் அதிகூடிய பாதிப்புக்கள் ஏற்படலாம்.” என்றும் தெரிவித்தார்.

தொற்றுதலின் விகிதம் 1:1

பரவுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 1:1 விகிதம் அடைய வேண்டும் . கீழே விளக்கப்படத்தைக் காணலாம்.

1:1 விகிதம் அல்லது அதை விட குறைவான விகிதம் அடைந்தால் பரவுதலின் வளைவு இறங்கிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். அதாவது பரவுதலின் முடிவுக் கட்டம் ஆரம்பமாகிறது.

“இன்று நடைபெறுகின்ற நிலவரத்தின் அடிப்படையில் இந்த இறுக்கமான நெறிமுறைகள் இன்னும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தான் கூறுவோம். சுகாதார ரீதியாக பாதுகாப்பான சூழல் அமைந்ததும் உடனடியாக அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. அதற்கு பின்பு தான் தொழிற்சாலைகள் மீண்டும் திறப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுக்கலாம்.” என்று Brusaferro தெரிவித்துள்ளார்.

“அன்றாட புள்ளிவிபரங்களை மட்டும் பார்த்து நாம் முடிவெடுக்க முடியாது. நிலவரத்தின் தொடர்ச்சியான காலப்போக்கை நாங்கள் அவதானிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

உங்கள் கவனத்திற்கு