தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது

நேற்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பிரான்சு வெளிநாட்டு அமைச்சிடம் தாம் அழுத்தம் தெரிவிப்பதாக உறுதி தரப்பட்டு அதற்கான முன்னெடுப்புக்களும் செய்யப்பட்டவை குறிப்பிடத்தக்கது. இன்று பி.ப பாசல் மாநகரத்தினூடாக சுவிசு நாட்டின் எல்லையில் உள் நுழைந்து தமிழீழ மக்களின் எழுச்சிகரமான வரவேற்போடு மீண்டும் தொடர இருக்கின்றது. இன்று 03/03/2022 காலை 9:30 மணிக்கு Marktpl. 9, 4001 Basel, Suisse எனும் இடத்தில் ஆரம்பமாகி தொடர்சியாக இலக்கு நோக்கி பயணிக்கின்றது.

“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.” – தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு