பெல்சிய தலைநகரான Bruxelles மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்

3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து Bruxelles மாநகரை இன்று 10.02.2021 வந்தடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில்
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்களுக்கு தமிழீழமே ஒற்றைத் தீர்வு என்றும், சிறீலங்காவின் சனாதிபதி தமிழினப் படுகொலையாளி என்றும் சர்வதேசமே ஈழத்தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும், தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை என்றும் மற்றும் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பன்னாட்டு ஊடகவியலாளர்களின் வருகையோடும் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது.

மேலும் Covid 19 கொடிய நோய் தொற்றுக்காலத்திலும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கி தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரனணயினை தாம் நிச்சயம் வலியுறுத்துவதோடு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவற்றிற்கு தாம் குரல் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவியின் ஆலோசகரினால் வாக்குறுதி வழங்கப்பட்டது .

எதிர்வரும் 22.02.2021 அன்று மனிதநேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை வந்தடைகிறது. மேலும் இக் காலகட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எம் விடுதலைக்கான தார்மிக கடமையை ஆற்றமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழிழம் மலரட்டும்.

தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு