வாகை கல்விநிலைய ஆரம்ப கட்ட நிர்மாண நிகழ்வு

இத்தாலி உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் தமிழ் இளையோர்களின் “உறவை வளர்ப்போம்” எனும் எண்ணக்கருவின் அடிப்படையில் வவுனியாவின் கரைந்து போகின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றாகிய சிதம்பரபுரத்தில் தரம்-6 தொடக்கம் தரம்-11 வரையான மாணவர்களுக்கான இலவச கல்வியை வழங்கும் பொருட்டு இடைநிலைக்கல்விக்கான “வாகை” கல்வி நிலைய ஆரம்ப கட்ட நிர்மாண நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

சிதம்பரபுரம் சமுக செயற்பாட்டாளர் திரு.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிதம்பர புரம் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமுர்த்தி உத்தியோகத்தர், மாங்குளம் சமுக செயற்பாட்டாளர் திரு.பிறேம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
வாகை கல்விநியை கட்டுமான பணிகள் பூர்த்தியடைந்தவுடன் கொரோனா (Covid-19) சுகாதார அறிவுறுத்தலுக் கமைவாக கல்விநிலைய கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு