தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம்

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி 04/09/2020 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் முன் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணமானது நேற்று (20/09/2020) Lausanne மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக 1300 km தூரத்தை பல இயற்கை இடர்களுக்கு மத்தியில் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை (ஐக்கிய நாடுகள் சபை முன்றலை) சென்றடைந்தது. இன்று திங்கட் கிழமை 21/09/2020 பிற்பகல் 2.30 மணிக்கு தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பன்னாட்டு சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மனித நேய ஈருருளிப் பயணமும் இணையவுள்ளது. சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு எமது விடுதலையை வேகப்படுத்துமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”