பிரதம அமைச்சரின் புதிய ஆணை

இத்தாலி பிரதம அமைச்சர் Giuseppe Conte

பிரதம அமைச்சர் Conte மேலதிக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அங்கீகரிக்கும் ஒரு புதிய ஆணையில் ஜூன் 11, 2020 அன்று கையெழுத்திட்டார்.

ஜூன் 15 முதல் நடைமுறையில் உள்ள சில நடவடிக்கைகள் இங்கே.

  • பந்தய விளையாட்டு மையங்கள், ஆரோக்கிய மையங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் சமூக மையங்களின் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் பிராந்தியங்கள் மற்றும் தன்னாட்சி மாகாணங்கள் முன்னரே தொற்றுநோயியல் வளைவுடன் இந்த நடவடிக்கைகளின் பொருந்தக்கூடிய தன்மையைக் கண்டறிய வேண்டும்.
  • 0-3 வயதுடைய குழந்தைகளுக்கும் கோடைகால மையங்கள் திறக்கப்படுகின்றன.
  • பொது நிகழ்ச்சிகள், திரையரங்குகள், கச்சேரி அரங்குகள், பிற வெளியான இடங்கள் திறக்கப்படும், ஆனால் சில முன்னெச்சரிக்கைகள் தேவை. மறுபுறம், வெளியில் மற்றும் உட்புறங்களில் செயல்படும் நடன சாலைகள் மற்றும் நடன clubகள் (disco) இன்னும் இடைநிறுத்தப்படுகின்றன. கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் ஜூலை 14, 2020 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. தொழில்முறை வகுப்புக்கள் நேரில் நடாத்தப்படலாம்.
  • வெளிநாட்டுப் பயணம் செய்வதைப் பொறுத்தவரை, நிரூபிக்கப்பட்ட வேலை காரணங்களுக்காக இத்தாலிக்கு வருபவர்களுக்கு, வீட்டுத் தனிமைப்படுத்தலின் தேவையில்லாமல், தங்குவதற்கான அதிகபட்ச காலம் 120 மணி நேரமாக (5 நாட்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஜூன் 12 முதல், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் தொற்று வாய்ப்புகளைத் தடுப்பதற்கு அந்தந்த விளையாட்டு கூட்டமைப்புகள் வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்க “மூடிய கதவுகளுடன்”, அதாவது பொதுமக்கள் இல்லாமல், அல்லது வெளிப்புறத்தில் மீண்டும் ஆரம்பமாகலாம். ஜூன் 25, 2020 முதல், பிராந்தியங்கள் மற்றும் தன்னாட்சி மாகாணங்களில் தொடர்பு விளையாட்டுகளும் அனுமதிக்கப்படுகின்றன. அவை சுகாதார அமைச்சு மற்றும் விளையாட்டு தொடர்பான பிரதிநிதித்துவ அரசின் உடன்படிக்கையுடன், அந்தந்த பிராந்தியங்களில் தொற்றுநோயியல் நிலைமையின் போக்குடன் மேற்கூறிய நடவடிக்கைகளின் பொருந்தக்கூடிய தன்மையை முன்னர் கண்டறிய வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு