Rilancio ஆணையில் உள்ளடங்கிய முக்கிய சலுகைகள்

தொழிலாளர்கள், நிறுவனங்கள், பாடசாலைகள், வணிகர்கள், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறைகளுக்கான 256 சட்டக் குறிப்புகளைக் கொண்ட Rilancio ஆணையின் சில முக்கிமயமான அம்சங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:

800 முதல் 1000 யூரோக்கள் வரை சுயதொழில் செய்வோர்க்கு சலுகை

Partita Iva மற்றும் collaboratori க்கான 800 யூரோக்களின் கொடுப்பனவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 33%சதவிகிதம் வரை வருவாய் இழப்பு இருப்பதை நிரூபிப்பவர்களுக்கு 1000 யூரோக்கள் வரை அதிகரிப்பு.

வீட்டுத் தொழிலாளர்கள் (colf) மற்றும் முதியோர் பராமரிப்பாளர்களுக்கு (badante) 600 யூரோக்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேறு எந்த பொது அரசாங்க ஆதரவும் இல்லாத மற்றும் Isee யில் 15 ஆயிரம் யூரோக்கள் வரை குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அவசரகால வருமானம் (reddito di emergenza) வழங்கப்படும்; இந்த சலுகை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் மற்றும் தனிநபர்களுக்கு 400 யூரோக்களும், ஒரு குடும்பத்திற்கு 800 யூரோக்கள் வரை இருக்கும்.

குழந்தை பராமரிப்பாளருக்கான சலுகை 1200 யூரோக்களும் சிறப்பு பெற்றோர் விடுப்பு 50% செலுத்தப்படுகிறது

Cura Italia ஒதுக்கிய 600 யூரோக்களுடன் ஒப்பிடும்போது, ​​குழந்தை பராமரிப்பாளருக்கு (bonus baby sitter) 1200 யூரோக்கள் வரை கொடுப்பனவு இரட்டிப்பாகியுள்ளது. இந்த குழந்தை பராமரிப்பாளர் சலுகை, கோடைகால மையங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேவைகளுக்காகவும் செலவிடலாம்.

கோடைகாலத்தில், 3 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, பகல்நேர கோடை மையங்கள், சமூக-கல்வி சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளைக் கொண்ட மையங்களை வலுப்படுத்த, 150 மில்லியன் யூரோ நிதி நகராட்சிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிதிவண்டிகள் வாங்குவதற்கான 500 யூரோ வரையிலான சலுகை

பொது போக்குவரத்திற்கு நிலையான நகர்வுகளின் மாற்று வடிவங்களை ஊக்குவிப்பதற்காக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் சட்டப்பூர்வமாக வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு Voucher வழங்கப்படுகிறது. இதில் மிதிவண்டி, bici a pedalata assistita, segway, hoverboard, monopattini மற்றும் monowheel ஆகியவை அடங்கும். ஆணை நடைமுறைக்கு வந்த திகதி முதல் 2020 டிசம்பர் 31 வரை இது செல்லுபடியாகும்.

பொதுப் போக்குவரத்தில் மக்களின் நெரிசல்களைக் குறைப்பதே இதன் நோக்கம், அதனால்தான் மிதிவண்டிகள் மற்றும் e-bike வாங்குவதற்கான சலுகைகள் மிகவும் கணிசமாகிவிட்டன.
இறுதியாக, நகராட்சிகள் மிதிவண்டிகளுக்கான பாதைகளை அமைப்பதில் ஈடுபடுகின்றன.
இந்த நடவடிக்கைகளுக்கு 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 120 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

வாகன நெரிப்பு, சூழல் மாசுபடுத்தும் மோட்டார் வண்டிகளுக்கான சலுகை

காலநிலையை மாற்றமடையச் செய்யும் வாகனங்களின் புகை உமிழ்வைக் குறைப்பதற்காக, சூழல் மாசினால் பாதிக்கப்பட்டுள்ள நகராட்சிகளில் 2021 சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை euro 3 வகுப்பு வரை அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை நெரிக்கவும் அல்லது euro 2 மற்றும் euro 3 வகுப்பு அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் வண்டிகள் நெரிப்பதற்க்கும் ஒரு “mobilità voucher” அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை மிதிவண்டிகள் வாங்குவதற்கு இணைக்கப்படலாம், ஒவ்வொரு சிற்றுந்துக்கும் (auto) 1500 யூரோக்கள் மற்றும் ஒவ்வொரு மோட்டார் வண்டிக்கு 500 யூரோக்கள் வரை வழங்கப்படும்.

மேலும், இந்த சலுகையை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், உள்ளூர் மற்றும் பிராந்திய பொதுப் போக்குவரத்திற்கான மாதாந்த பயணச்சீட்டு சந்தாக்களை பெறுவதற்கு குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

பொது போக்குவரத்து சந்தாக்கள்

முடக்கநிலையால் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் செல்லுபடியாகும் பொதுப் போக்குவரத்துக்கான சந்தா வைத்திருப்பவர்கள், தங்கள் சொந்த பொறுப்பின் கீழ், பயணச்சீட்டை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்த முடியவில்லை என்று அறிவிக்கும் பட்சத்தில் அதனை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் பயன்படுத்தப்படாத நாட்களுக்கு சந்தாவின் தொகைக்கு சமமான voucher வடிவத்தில் சலுகை வழங்கப்படும்.

மேலும், இச்சலுகை வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும். மாற்றாக, சந்தாவின் பயன்பாட்டுக் காலத்தை அது பயன்படுத்த முடியாத காலத்திற்கு சமமாக நீட்டிக்க முடியும்.

தற்காலிக பணிநீக்கங்களின் நீட்டிப்பு 10 பில்லியன் மதிப்புடையது

சுயதொழில் செய்பவர்களுக்கு 600 யூரோ கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படும். Partita Iva , co.co.co, பருவகால ஊழியர்கள் மற்றும் வணிகர்களுக்கான மொத்த ஒதுக்கீடு 4.5 பில்லியன் ஆகும். தற்காலிக பணிநீக்க (cassa integrazione) காசோலைகளை ஒன்பது வாரங்கள் நீட்டித்தல், மொத்த ஒதுக்கீட்டில் 10 பில்லியன் யூரோக்களாக உயர்கிறது.
தற்காலிக பணிநீக்க நிதியைப் பெறுவதற்கான நடைமுறைகளும் மாறுகின்றன.

மேலும் 9 வாரங்களுக்கு பணிநீக்க நிதி நீட்டிப்பு

மேலும் 9 வாரங்களுக்கு பணிநீக்க நிதி மற்றும் சம்பள ஒருங்கிணைப்பு நிதி கொடுப்பனவு வழங்கப்படலாம். இந்த கூடுதல் 9 வாரங்களில், 5 வாரங்கள் ஆகஸ்ட் இறுதி வரை பயன்படுத்தப்படலாம், கடைசி 4 வாதங்களை பிரத்தியேகமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பயன்படுத்தப்படலாம். மறுதொடக்க ஆணை மூலம், குறிப்பாக பணிநீக்க நிதி, 30 நாட்களுக்குள் செலுத்தப்படக் கூடியதாக நடைமுறை எளிமைப்படுத்தப்படும்.

வணிக வாடகை, 60% வரிக் குறைப்பு, வங்கிகளுக்கு மாற்றத்தக்கது

கடைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான மாத வாடகைக்கு 60% வரிக் கடன். தொழில்துறை, வணிகம், கைவினை, வேளாண்மை, சுற்றுலா அல்லது சுயதொழில் வேலைகளின் பயன்பாட்டிற்கான குடியிருப்பு அல்லாத இடங்களின் ஒப்பந்தங்களுக்காக இந்த நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

5 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் அல்லது கட்டணம் உள்ளவர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
சிக்கலான சேவைகள் அல்லது வணிக குத்தகைகளுடனான சேவை ஒப்பந்தங்களில், வணிகத்தை மேற்கொள்வதற்கு நோக்கம் கொண்ட குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கான குறைந்தது ஒரு இடம் உட்பட, வரிக் கடன் 30% ஆக குறைகிறது.

அவசரகால வருமானம்

அவசரகால வருமானத்திற்கான ஒரு பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு 400 முதல் 800 யூரோக்கள் வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு வருமானம் மற்றும் சொத்துக்கள் கருத்தில் கொள்ளப்படும்.

சேமிப்பு, அஞ்சல் voucher தொலைபேசியில் பதிவு

அஞ்சல் சேமிப்பு பத்திரங்களை கணினியில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் வாங்கலாம். இணையவழி ஊடாக சேமிப்புகளை கைப்பற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கும், தபால் நிலையங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்ப்பதற்கும் இப் புதிய முறையை அறிமுகப்படுத்தப்படுகிறது. COVID-19 க்கான அவசர காலங்களில் காலாவதியான பத்திரங்களை வசூலிப்பதற்கான அனுமதி இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களின் பராமரிப்பாளர்களை முறைப்படுத்துதல்

தொழிலாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் முதியோர்களின் பராமரிப்பாளர்கள், ஒப்பந்தமற்ற வேலையுறவைக் கொண்ட இத்தாலிய மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் காலாவதியான குடியிருப்பு அனுமதிகளுடன் இருப்பவர்களை இந்த முறைப்படுத்துதல் சென்றடையும்.

முறையற்ற வேலையுறவில் இருந்து வெளிவருவதற்கு தொழிலாளி மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் கோரிக்கை வரலாம். முதலாவதாக, 31 அக்டோபர் 2019ல் இருந்து காலாவதியான குடியிருப்பு அனுமதி கொண்ட வெளிநாட்டு குடிமக்கள் தற்காலிக 6 மாத கால அவகாசத்தை கோரலாம். அந்தக் காலத்திற்குள் அவர்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெற்றால், வேலை காரணங்களுக்கான குடியிருப்பு அனுமதிப்பத்திரமாக மாற்றப்படும். இரண்டாவதாக, கூட்டு ஒப்பந்தத்தில் (contratto collettivo) வழங்கப்பட்டதை விட குறைவாக இல்லாமல், வேலை ஒப்பந்தத்தின் காலம் மற்றும் ஊதியம் ஆகியவற்றைக் குறிக்கும் தொழிலாளருக்கான கோரிக்கையை சமர்ப்பிப்பது முதலாளிதான்.

ஒவ்வொரு தொழிலாளிக்கும், முதலாளி 400 யூரோக்கள் இழப்பீடு மற்றும் வரிகளில் ஒரு மொத்த தொகையை செலுத்த வேண்டும். தற்காலிக குடியிருப்பு அனுமதி (காவல்துறை தலைமையகத்திற்கு) வழங்குவதற்கான விண்ணப்பமும், ஒப்பந்தமற்ற வேலையுறவிலிருந்து வெளிப்படுவதற்கான விண்ணப்பமும் (INPS மற்றும் Sportello unico per l’immigrazioneக்கு) ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

காலவரையுள்ள வேலை ஒப்பந்தங்கள், புதுப்பித்தல் எளிமை

பணிநீக்கங்களை எதிர்கொள்வதற்கு மறுதொடக்க ஆணையில், காரணத்தை குறிப்பிடாமல், ஒப்பந்தங்களை நீட்டிப்பதற்கான சாத்தியத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கையகப்படுத்தல் (pignoramento), நிறுத்தம்

இந்த ஆணை ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான கையகப்படுத்தலை நிறுத்தி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட கொடுப்பனவுகளுக்கான மறு ஆரம்பம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க முனைகின்றது.

உங்கள் கவனத்திற்கு