உயிரிழந்த சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனாவைரசால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது.

Venezia வில் குடும்ப வைத்தியராக பணியாற்றும் மருத்துவர் ஒருவரே 100 வதாக இறந்துள்ளார். இவர் Siria நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தொற்றுக்கு உள்ளாகி Treviso மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 08 ஏப்ரல் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரைப் போலவே, தற்போது Milano வில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணியாற்றும் 5 மருந்தாளர்கள் (farmacisti) கொரோனாவைரசுக்கு உள்ளாகி உள்ளனர் என்று சந்தேகிக்கப் படுகின்றனர். அவர்கள் பலமுறை COVID-19 அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டும் அவர்களுக்கான பரிசோதனைகள் இன்னும் செய்யப்படவில்லை மற்றும் tachipirina மட்டுமே ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், Lombardia வின் பிராந்திய நிர்வாகம் அறிகுறி உள்ள அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது என்று உறுதியளித்தாலும் இன்னும் தங்களுக்கான பரிசோதனை மறுக்கப்படுள்ளது என்று அவர் தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.

Codogno வின் முதல் நோயாளி கண்டறிவதற்கு பல வாரங்களுக்கு முன்பே, பல மருந்தகங்களில் பாதுகாப்பு நிலைமைகள் எதுவும் இல்லை; யாரும் அறியாமலே வைரசு பரவிக்கொண்டிருந்த ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி ஒரு பகுதி முழுவதும் வயதானவர்களையும் நோயுற்றவர்களையும் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் கையாள்வது சிந்திக்க முடியாதது. நாங்கள் அதைச் செய்தோம் என்று அவர் கூறினார்.

மறுபக்கம், «COVID-19 இனால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் செயற்கை மூச்சுக்கு குழாய் மூலம் சிகிச்சையளிக்கப் பட்டு வருகின்றனர். இதனால் நோயாளியுடன் நெருக்கத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகின்றது. எங்களுக்கு பாதிப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது. எனினும் நாங்கள் இந்த அழுத்தத்தில் இருக்கப் பழகிவிட்டோம், ஆனால் இப்போது இருப்பதைப் போல நாங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. பாதுகாப்பு சாதனங்களுக்கு பஞ்சமில்லை, இருந்தாலும் நிச்சயமாக நாம் அனைவரும் பாதிக்கப்படுவோம் என்று பயப்படுகிறோம் » என்று Ravenna மருத்துவமனை மயக்க நிபுணர் Menchise தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பதட்டம் பல சுகாதார பணியாளர்களை மனவுளைச்சலுக்கு தள்ளுகிறது. இது வேலையை மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, இந்த தொற்றுநோய்க்கு எதிராக முன் நிலையில் நின்று போராடும் சுகாதார பணியாளர்களை பாதுகாப்பது அரசாங்கத்தினதும் மக்களினதும் கடமையே ஆகும்.