இத்தாலி பியல்லாவில் 31.05.2025 சனிக்கிழமை அன்று அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு


அனைவருக்கும் வணக்கம்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதியில் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களிற்கான வீரவணக்க நிகழ்வை எதிர்வரும் 31/05/2025 அன்று அனைத்துலக ரீதியில் செய்வதற்கான ஒழங்குகளை தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் இத்தாலி பியல்லா நகரிலும் நிகழ்வுக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.எனவே இவ்வீரவணக்க நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இத்தாலி