இத்தாலி ரெஜியோ எமிலியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது 18/05/2025 இத்தாலி ரெச்சியோ எமிலியாவில் Piazza della Vittoria, என்னும் இடத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர் . இந்த நிகழ்வானது முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு பற்றிய விளக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றல் , இத்தாலிய தேசியக் கொடியேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதான சுடர்ரேற்றல் நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து மலர்வணக்கம், சுடர்வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்ட அதே நேரம் ஈழத் தமிழின அழிப்புக்கு நீதி கோரி மனுவில் கையெழுத்து வாங்கப்பட்டது. தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவியின் கவிதையை தொடர்ந்து இத்தாலிய தேசியக் கொடி, தமிழீழ தேசியக்கொடி கையேந்தலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டுஉறுதி மொழி எடுக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

உங்கள் கவனத்திற்கு