இத்தாலி ஜெனோவா நகரில் தமிழின அழிப்பு நினைவுநாளை முன்னிட்டு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல்
முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று மானச்சாவடைந்த மக்களுக்கு நீதி கேட்டு (18/05/2025) ஞாயிற்றுக்கிழமை 19:00 மணிக்கு Piazza Henry Dunat-4
Piscina Di Albaro La’piazza 32 எனும் இடத்தில் இத்தாலி அரசிடம் கையளிக்கப்படவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவில் மக்கள் அனைவரும் கையொப்பமிட்டனர். தொடர்ந்து அரசியல் சந்திப்பு ஊடாக எம் இன மக்கள்பட்ட அவலங்களையும், இழப்புகளையும் விளக்கக்காட்சிப் படம் மூலம் வேற்றின மக்களுக்கு ஈழத் தமிழராய் ஒன்றிணைந்து எடுத்துரைத்துக் காட்சிப்படுத்தப்பட்டது. பெருந்திரளான மக்கள் கூடியிருந்த அந்த வேளையில் எம்மால் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில் அக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை செயற்படுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உணர்வு நிறைந்த பதிவுகள் சில…..



















































