கண்ணின் மணிகளே கார்கால பூக்களே…
எண்ணத்து எழிலுறை இனமுறை ஏற்றமது காணவென விரைந்த கடுகதி புரவிகளே.. விண்ணுறை மறையுண்ட வீரமறை விண்மீன்களே.. 
இளமையதில் இனம் காக்க புறப்பட்டே விதையான வீரப் புலிகளே..
பண்பினில் வளர்ந்திருந்த பார்புகழும் காட்டாற்று வெள்ளமதின் கரை புரளா அலைமேவிகளே
விடுதலை வேண்டி வளர்கண்ட வீரர்கள் நீங்கள்.. 
வருவோம் மீண்டு என்று வீரகளம் கண்டவரே
வடுக்கள் பலசுமந்தும் செந்தமிழின் இனமது விடிவுக்காய் வீரச்சமர் கண்டவரே.. அதற்காய் வீரமரணம் கண்டவரே..

கார்த்திகை பூக்களே.. மண்ணின் பலம் காத்த பண்ணுறை வீர மண்ணுறை தெய்வங்களே..
கல்லாய் உறைந்தாலும் விண்ணில் மறைவினும்.. கனவிலும் மக்கள் மனதினில் உறைந்தவர் நீங்கள்..
மண்ணுக்குள் விதையுண்டீர் ஆணுடன் பெண்ணாய் பேதம் ஏதுமின்றி பெரும் சமர் புரிந்திட்டீர்…

தமிழர் தாகம் தணித்திட தார்மீக தலைவன் வழி தடம் பதித்த தாரகைகளே..
காலம் கடந்திடினும் எங்கள் கார்த்திகை பூக்களே உமை மறப்போமா.. 
மனததில் மறவுறா மானிட மாவீர செல்வங்களே
நினைவதாய் என்றும் இனமதன் மனதினில் மறைந்திடா மாவீர மணிகளே.. நினைவுறுவோம் சுடரது ஏற்றியே…. 
நினைவெலாம் நிறைந்தவர்.. 
நிம்மதி தீரா உறவுகள் மனத்திடை மலர்ந்தவரே… 
என் சொல்வோம்.. 
நினைவுறுவோம்..
வீர மறவரே எம்மனதிடை என்றும் உறைவீரே.. 
உங்களுக்கு எங்கள் தலை தாழ்ந்த வணக்கம்.. 
என்றுமே..

குமரகுருபரன் நாப்பொலி .

உங்கள் கவனத்திற்கு