அனைத்துலகத் தாய்மொழிநாள்: கட்டுரை, கவிதைப் போட்டிகள்

தாய்மொழிகளின் சிறப்புகளை உணர்த்தவும் அவற்றைப் பேணிக்காக்க வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் நாளினைத் தாய்மொழி நாளாக ஐக்கிய நாடுகள் சபை – யுனசுகோ (UNESCO) நிறுவனம் அறிவித்துள்ளது.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையானது தமிழ்மொழி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்களிடம் தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை, எம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகள், தாய்மொழியும் தமிழர் தாயகமும், தாய்மொழியும் கலை பண்பாடும் ஆகிய விடயப்பரப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தேடலை அதிகரிக்கவும் அறிவைப் பெருக்குவதற்குமாகக் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை நடாத்துகிறது.

இப்போட்டிகளில் வயதுப்பிரிவுகளின் அடிப்படையில் பங்குபற்ற விரும்புவோர் அனைவரும் பங்குபற்றலாம். ஒவ்வொரு வயதுப்பிரிவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் விரும்பிய ஏதாவது ஒன்றினைத் தெரிவுசெய்து ஆக்கங்களை ஆக்கலாம்.
விரும்பியவர்கள் அந்தந்த வயதுப்பிரிவுக்குட்பட்டு ஒன்றிற்கு மேற்பட்ட ஆக்கங்களையும் சமர்ப்பிக்கலாம்.

தாய்மொழித் தினப்போட்டியில் பங்கேற்கும் திலீபன் தமிழ்ச்சோலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஒவ்வொரு ஆக்கத்திற்குமான விண்ணப்பப்படிவங்கள் போன்றவற்றை அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தால் போதுமானது.

இப்போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் பங்குபற்றியமைக்கான சான்றிதழும் தெரிவு செய்யப்படும் தரமான ஆக்கங்களுக்குச் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

தாய்மொழித் தினப்போட்டி சார்ந்த அனைத்து விபரங்களும் பங்குபற்றுவதற்கான விண்ணப்பப் படிவமும் கீழ் சேர்க்கப்பட்டிருக்கும் பக்கத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

அனைத்துலகத்-தாய்மொழி-நாள்-2022-கட்டுரை-கவிதைப்-போட்டிகள்

அனைத்துலகத்-தாய்மொழி-நாள்-2022-படிவம்-1

விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய

உங்கள் கவனத்திற்கு