பொங்கு தமிழ்

90 களில் நிலவப்பட்ட சிறிலங்கா இராணுவ கெடுபாடுகள், அதிலும் யாழ் பல்கலைக்கழத்தில் இறுக்கமான இராணுவ கட்டுப்பாடுகள் தமிழ் மாணவர்களிடம் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே 2001 ஆம் ஆண்டு சனவரி 17 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தினரை எதிர்த்து பொங்கு தமிழ் எனும் எழுச்சிப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். இம் மாபெரும் எழுச்சிப் போராட்டத்தின் தோற்றம் பற்றியும் தாயகத்தில் இன்று நிலவி வரும் அரசியல் நிலவரம் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தமிழ் தகவல் மையத்திற்கு அளித்த பேட்டியின் பதிவு கீழே.

மாணவர்கள் ஒன்று சேர்ந்து கலை நிகழ்ச்சிகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள், எழுச்சி நாடகங்கள் மற்றும் ஆக்கங்கள் ஊடாக ஈழத்தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் அநீதிகளுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

அவ் ஆண்டு தொட்டு 2008 வரை ஈழத்தில் பல்வேறு இடங்களில் பலஆயிரம் மக்கள் திறலுடன் பொங்குதமிழ் மிக சிறப்பாக எழுச்சி பூர்வமாக நடைபெற்று வந்தது. அதுமட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும், குறிப்பாக செனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் ஒன்றுகூடி பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வந்தன.

இதுவரை நியூசிலாந்து, இத்தாலி, நோர்வே, டென்மார்க், தென்னாபிரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, சுவீடன், பெல்ஜியம், நெதர்லாந்து, பின்லாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் பொங்குதமிழ் ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

ஆயுதப் போராட்டம் மூலம் மட்டுமின்றி, கலைநிகழ்ச்சியூடாகவும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பேரெழுச்சி பெற்றுள்ளது.

உங்கள் கவனத்திற்கு