நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் வீரவணக்க நிகழ்வு

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021 காலை 10 மணிக்கு பலெர்மோவில் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் பொதுமக்களின் வருகையை தவிர்த்து குடும்ப உறுப்பினர்கள், தேசிய செயற்பட்டாளர்கள், இத்தாலிய அரசியல் பிரமுகர்களுடன் தமிழீழ தேசிய மாவீரர் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இத்தாலி ஊடகங்கள், அரசியல் பிரமுகர்களின் சமூகவலைத்தளங்களில் நாட்டுப்பற்றாளர் குஞ்சண்ணையின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

உங்கள் கவனத்திற்கு