மாவீரச் செல்வங்களை நினைவுகூருவோம்!

“எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது. நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்” – தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்

சமகாலத்தில் உலகில் ஏற்பட்டுள்ள கோவிட்19 இன் பெருந்தொற்று நெருக்கடிச் சூழ்நிலையால், எமது தாயக மண்மீட்புக்காக உயிர்நீத்த உன்னதர்களான மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை வழமை போன்று இம்முறை ஒன்றுகூடி உணர்வுபூர்வமாக நினைவுகூர முடியாத சூழ்நிலையின் காரணத்தால் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வோடு மாவீரர் வாரத்தினையும், மாவீரர் நாளையும் நினைவுகூரும் முகமாக சமூகவலைத் தளங்களான முகநூல் (Facebook), புலனம்( Whatsapp), கீச்சகம் (Twitter), படவரி (Instagram) போன்ற அனைத்து சமூகவலைத்தளங்களிலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முகப்புப் படம் (Instagram) மற்றும் அட்டைப்படம் (Cover picture) ஆகியவற்றை தங்களுடைய ஏற்கனவே தரவேற்றப்பட்டுள்ள படங்களுக்குப்பதிலாக மாற்றம் செய்து மாவீரர் வாரத்தை ஒருமித்த தமிழீழத் தேசிய உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் கவனத்திற்கு