குடும்பங்களை ஆதரிக்க புதிய ஆணை வரவிருக்கிறது

இத்தாலி பிரதமர் Giuseppe Conte

அவசரநிலை காரணமாக ஏற்பட்டுள்ள குடும்ப மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க ஏப்ரல் 25 திகதிக்கு முதல் புதிய அரசாணை வரவுள்ளது.
குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் பணி புரிபவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு 70 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 30 மில்லியன் நிறுவனங்களுக்காகவும் மிகுதி வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

குடுபங்களுக்கான உதவி:

  • தற்காலிக பணிநீக்கங்களுக்கான (cassa integrazione) பணம் வழங்குதல் 4 அல்லது 5 வாரங்களுக்கு நீட்டிப்பு.
  • சுயதொழில் செய்பவர்களுக்கு (autonomi e professionisti) மற்றும் Co.Co.Co. பணி ஒப்பந்தத்தில் வேலை செய்வோர்க்கு 600 முதல் 800 யூரோக்கள் வரை சலுகைப் பணம் அதிகரிப்பு. மேலும், இந்த சலுகை 2 மாதங்களுக்கு (ஏப்ரல் மற்றும் மே) வழங்கப்படும்.
  • விசேட பெற்றோர் விடுமுறை நீட்டிப்பு அல்லது குழந்தை பராமரிப்பிற்கு செலுத்த வேண்டிய voucher க்கும் மேலாக, 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வருமான அடிப்படையில் ஒரு முறை சலுகை வழங்கப்படலாம்.
  • இத்தாலியில் விடுமுறை நாட்களைக் கழிக்கும் குடும்பங்களுக்கு சலுகை நிறுவப்படுவதும் சாத்தியமாகும்: இது வருமானத்தின் அடிப்படையில் (26 ஆயிரம் யூரோக்கள் வரை) அதிகபட்சமாக 325 யூரோக்களை எட்டக்கூடும்.

அவசரகால வருமானம் (reddito di emergenza ), வீட்டுப் பணியாளர்கள் (colf ) மற்றும் முதியோர் பராமரிப்பாளர்களுக்கான (badanti) உதவிகள்:

  • வேலை மற்றும் ஓய்வூதியங்கள் அல்லது பிற பொது அரசாங்கச் சலுகைகள் இல்லாத குடும்பங்களுக்கு அவசரநிலைக்கான வருமானம் வழங்குதல்.
  • வீட்டுத் தொழிலாளர்கள் (colf ) மற்றும் முதியோர் பராமரிப்பாளர்களுக்கு (badanti) வேலை செய்யும் நேரத்தின் அடிப்படையில் (முழு அல்லது பகுதி நேர வேலை) 200 முதல் 400 யூரோக்கள் வரை சலுகை வழங்கப்படலாம்.

கடைகள், உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கான உதவிகள்:

  • அரசாங்க நடவடிக்கைகளால் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட சிறிய நிறுவனங்களுக்கு (கடைகள், விடுதிகள், உணவகங்கள்) திருப்பிச் செலுத்த முடியாத நிதியின் மூலம் இழப்பீடு வழங்குதல் விவாதத்தில் உள்ளது.
  • Cura Italia ஆணையில் முடிவு செய்யப்பட்டு, வாடகைக்கு 60% விகித வரிக் கடன் பெறாதவர்களுக்கு, இந்த நடவடிக்கையின் நீட்டிப்பு தொடரப்படலாம்.

வரி வசூல் பதிவுகளுக்கு சரியான முறையில் இணங்காதவர்களுக்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது நிறுத்திவைத்தல். வருமான நிறுவனத்திற்கு (Agenzia delle entrate) செலுத்தவேண்டிய கட்டணங்கள் நிறுத்திவைப்பு ஆகியவை வரப் போகும் புதிய ஆணையின் அம்சங்களாக இருக்கக்கூடும்.

உங்கள் கவனத்திற்கு