வாகன வரி (Bollo auto): பணம் செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கொரோனாவைரசினால் இத்தாலியில் பல மாநிலங்களில் Bollo auto எனும் வாகன வரிக்கான பணம் செலுத்துதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 மாநிலங்கள் இந்த தீர்மானத்தை நடைமுறைப் படுத்தியுள்ளன. ஒவ்வொரு மாநிலமும் வரிப் பணம் செலுத்துவதற்கான தனிப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.

Piemonte, Lombardia, Lazio, Marche, Emilia Romagna, Calabria, Friuli-Venezia Giulia, Umbria மற்றும் Campania ஆகிய மாநிலங்கள் 30 ஜூன் வரை எந்தவொரு அபராதமும் வட்டியுமின்றி வரிப் பணம் செலுத்துவதற்கான காலவகாசத்தை நீட்டித்துள்ளன.

Liguria மற்றும் Abruzzo வில் இந்த காலவகாசம் 31 ஜூலை 2020 வரை நீண்டுள்ளது.

Basilicata, Molise, Puglia, Sardegna, Sicilia, Trentino-Alto Adige மற்றும் Valle d’Aosta போன்ற மாநிலங்களில் வாகன வரி இடைநிறுத்தபடவில்லை. ஆனாலும், இந்த மாநிலங்களின் நிர்வாகங்கள் எதிர்வரும் நாட்களில் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், Bollo auto என்பது போக்குவரத்துக்கான வரி அல்ல. இது “உடைமை” வரி என்பதை நினைவில் கொள்ள வேண்டும், எனவே வாகனத்தை பயன்படுத்தாவிட்டாலும் இது செலுத்தப்பட வேண்டும்.

காப்பீடுகள் RC auto

Cura Italia ஆணையின் படி polizze Rc auto காலாவதியை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது, சாதாரண polizze Rc auto காலாவதியாகும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் புதுப்பிக்கப் படவேண்டும். இந்த அவசர நிலையினால் தற்போது காலாவதியாகும் polizze Rc auto 30 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படலாம். மேலும், இந்த நீட்டிப்பு Rc க்கு மட்டுமே செல்லுபடியாகும். திருட்டு மற்றும் தீப் பிடித்தல் போன்ற வேறு எந்த காப்பீடுகளுக்கும் அல்ல.

உங்கள் கவனத்திற்கு