இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)

22 மார்ச் அன்று தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் Lombardia மாநிலத்திற்கு வந்துள்ளனர்.

Alitaliaவால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட விமானத்தில் இந்த கியூபா மருத்துவ படையணி Malpensa விமான நிலையத்தை சென்றடைந்தார்கள். கொரோனாவைரசை தடுப்பதற்காக வந்திருக்கும் 37 மருத்துவர்கள் மற்றும் 15 செவிலியர்களும் பல்வேறு தொற்று நோய் நெருக்கடிகளில் வேலை செய்த மருத்துவ நிபுணர்கள்.

யார் இந்த மருத்துவர்கள்?

1959 ஆண்டில் Fidel Castro ஆல் சிந்திக்கப்பட்ட கியூபாவின் “சர்வதேச மருத்துவ கொள்கை” இன்று வரை கியூபாவின் மிகச் சிறந்த பெருமை ஆகும். உலகெங்கும் சுகாதார நெருக்கடிகள் இருக்கும் சூழல்களில் மனிதாபிமான அடிப்படையில் அவசர மருத்துவ நிபுணத்துவம் பெற்ற அணிகளை கியூபா அனுப்பி வருகிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் 2014ஆம் ஆண்டில் Ebola தொற்று நோய் நெருக்கடி வெடிக்கும் பொழுதும் கியூபா தன்னுடைய சிறந்த மருத்துவர்களை அனுப்பியுள்ளது. 4500 மக்கள் உயிரிழந்த சூழ்நிலையில் கியூபா அரசாங்கம் 300 கும் மேற்ப்பட்ட மருத்துவ நிபுணர்கள், செவிலியர்களை அவ் இடங்களுக்கு அனுப்பிவைத்து நோயை கட்டுப்படுத்த பெரும் பங்காற்றியது.

2004ஆம் ஆண்டு சுனாமி நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இதைப்போன்று மருத்துவ அணிகள் அனுப்பப்பட்டார்கள்.

இதனால் தான், மிகப்பெரிய மருத்துவக் குழுவை வழங்கும் நாடு என கியூபா திகழ்கிறது. அவ்வகையில் இன்றும் இத்தாலியின் இறுக்கமான அவசர நிலையை அறிந்து தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது.

52 கியூப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் Malpensa விமான நிலையத்தை சென்றடைந்தார்கள்

L’Avana மருத்துவமனையின் நிர்வாகி Dott. Carlos Pérez Días தலைமையில் இந்த நிபுணர்கள் அணி இவ்வாறாக அமைந்துள்ளது:

  • 1 ஒருங்கிணைப்பு மேலாளர் (Responsabile Logistica e coordinamento);
  • 23 பொது மருத்துவ நிபுணர்கள்;
  • 3 நுரையீரல் நிபுணர்கள்;
  • 3 தீவிர சிகிச்சை மருத்துவர்கள்;
  • 3 தொற்று நோய் நிபுணர்கள்;
  • 3 அவசர சிகிச்சை மருத்துவர்கள்;
  • 15 நிபுணத்துவம் பெற்ற செவிலியர்கள்.

இந்த 52 நபர்கள் கொண்ட மருத்துவ அணி திங்களிலிருந்து Lombardia மாநிலத்தில் உள்ள Crema நகர மருத்துவமனையில் பணியில் ஈடுபடவுள்ளனர்.

ரஷ்யா நீட்டிய உதவிக்கரங்கள்

இது போன்று என்னும் 8 வீமானங்கள் ரஷ்யா அனுப்பும் என்று Putin உறுதியளித்தார்.

COVID-19 தொற்றுநோயிக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ ரஷ்யாவும் தன்னுடைய கரங்களை நீட்டியுள்ளது. இராணுவ “நச்சுயிரியல் வல்லுநர்கள்” (virologi), மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதர உபகரணங்களை இத்தாலிக்கு ரஷ்யா சனாதிபதி Vladimir Putin அனுப்பிவைத்தார். ஞாயிறு தரையிறங்கிய முதலாவது வீமானத்தை இத்தாலி வெளியுறவு அமைச்சர் Luigi di Maio வரவேற்றார். இது போன்று மேலதிகமாக 8 வீமானங்களை ரஷ்யா அனுப்பும் என்று Putin உறுதியளித்தார்.

முதலாவது வீமானத்தை இத்தாலி வெளியுறவு அமைச்சர் Luigi di Maio வரவேற்றார்

உங்கள் கவனத்திற்கு