இத்தாலி நாட்டின் 80வது சுதந்திர தின நிகழ்வில் தமிழின அழிப்பிற்கான நீதி கோரல்

இத்தாலி சுதந்திர தினமடைந்து 80வது ஆண்டு. சுதந்திர நாள் நிகழ்வுகள் இத்தாலியில் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன அதே போல் பியல்லா வல்திலானா நகரசபையின் ஏற்பாட்டில் monumento dei caduti e partigiani di margosi(சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தில்) என்னும் இடத்தில் 25/04/2025 காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில் இவ் பிரதேசத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாமும் கலந்து கொண்டிருந்தோம். வல்திலானா நகர சபையின் முதல்வர் கார்லோ மாரியோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களால் சுதந்திர தின உரைகள் நிகழ்த்தப்பட்டது. அவர்களுடன் வல்திலானா நகர சபை உறுப்பினரும் தமிழ் இளையோர் அமைப்பின் பணியாளருமாகிய செல்வி குமரேசன் மதுஷா அவர்களும் சுதந்திர தின நினைவுரை நிகழ்த்தினார்.

இத்தாலியின் சுதந்திரத்துக்காக மரணித்த வீரர்களையும் நினைவு கூறுவதுடன் இவ் வீரர்களைப் போல் தான் எமது மாவீரர்களும் ,மக்களும் சுகந்திர தமிழீழம் மலர்வதற்காக தம் இன்னுயீர்களை ஆகுதி ஆக்கி எண்ணற்ற தியாகங்களையும் ,அற்பணிப்புக்களையும் நிகழ்த்தி இருந்தார்கள் என்பதையும், இன அழிப்புபிற்கு இன்றும் ஆளாகிக்கொண்டிருக்கும் எமதினத்திற்கு இன்னும் நீதி இல்லை அதற்காகவே நாம் தொடர்ந்தும் போராடுகிறோம் எனும் கருத்தை ஆழமாக பதிவுசெய்ததோடு இங்கு வாழும் நாம் அழிக்கப்பட்ட எமது மக்களை நினைவு கூறுவதற்காக நினைவு இடத்தை எமக்காக தந்தமைத்த வால்திலான நகர சபைக்கும் நன்றி கூறுவதுடன் இறுதியாக தமிழர்கள் ஆகிய எமக்கு இப்படியான ஓர் சுதந்திர நாள் வரும் என்ற நம்பிக்கையுடனும் ,உறுதியுடனும் இத்தாலி சுதந்திர தின நாள் இனிதே நிறைவடைந்தது.

உங்கள் கவனத்திற்கு