ஈழத்தமிழின அழிப்புக்கு நீதி கோரி இம் மனுவில் கையெழுத்து இடுங்கள்


அனைவருக்கும் வணக்கம் ,
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது நடாத்தி வரும் இனவழிப்பு மே18 2009 ஆண்டு உச்சம் தொட்ட நாளாகும்.16 ஆண்டுகள் கடந்தும் இதற்கான நீதி கிடைக்கவில்லை .
இவ்வாண்டு இந்நாளை முன்னிட்டு இத்தாலி தமிழ் தேசிய கட்டமைப்புகள் சில இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக பின் வரும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை இத்தாலி அரசிடம் கையளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதனை கருத்தில் கொண்டு அனைவரினதும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம்.
மனுவின் உள்ளடக்கம்
ஈழத்தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் ,
ஈழத்தமிழின மக்களுக்கு நடந்த இனஅழிப்பு மற்றும் போர்குற்றங்களுக்கான நீதியான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ,
ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரவு தர வேண்டும்,
ஈழத்தமிழின மக்களின் தேசிய அடையாளம் “சிங்களவர்” அல்ல “தமிழர்” என இத்தாலி நாட்டு ஆவணங்களில் சரி செய்யபட வேண்டும் ,
தமிழின அழிப்பு வாரத்தை அங்கீகரித்து அது தொடர்பான கற்பித்தலுக்கு அனுமதி தரவேண்டும்,
மே 18 ஈழத்தமிழின அழிப்பு நாளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது மண்ணையும் மக்களையும் காக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சிக்கு உங்கள் முழுமையான ஆதரவைத் தாருங்கள்.
நன்றி .
இத்தாலிய தமிழ் தேசிய கட்டமைப்புகள்



