இத்தாலி பாடசாலைகளில் தமிழின அழிப்பு தொடர்பான கருத்தூட்டல்

வல்திலானா நகரசபையின் அனுசரணையுடன் 13/05/2025 அன்று காலை ஒன்பது மணிமுதல் பகல் ஒரு மணிவரை இத்தாலி Triveroவில் உள்ள பாடசாலைகளில் தமிழின அழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இத்தாலி மாணவர்கள் ஆசிரியர்களுடன் இத்தாலி தமிழ் இளையோர்களால் காட்சிப்பதிவுகளும், கலந்துரையாடலும் இடம்பெற்றது.

ஈழத்தமிழர் யார்? எங்கள் வரலாற்று, தமிழின அழிப்பில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இவற்றை மிகவும் ஆதார பூர்வமாக விளக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் மிகவும் ஆச்சரியத்தோடு உணர்வுகளை வெளிப்படுத்தினர் .

எங்கள் சமூகத்தில் வாழும் உங்களுக்கு பின்னால் இவ்வாறான ஓர் துயரம் இருப்பது எமக்கு தெரியாது போய்விட்டது. சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டன என்று அவர்களுடைய கவலையை வெளிப்படுத்தியதோடு நீதிக்கான எமது போராட்டத்தில் நிச்சயம் தங்களுடைய பங்களிப்பும் இருக்கும் என உறுதிஅளித்தனர். இறுதியாக மாணவர்களிடம் கருத்தறிதல் படிவம் பூர்த்தியாக்கப் பட்டதோடு நிறைவு பெற்றது.

இக் கலந்துரையாடல்களில் 147க்கு மேற்பட்ட மாணவர்களும் ,அவர்களது ஆசிரியர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு