இத்தாலியில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023

இத்தாலி – பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023, 27.11.2023 திங்கட்கிழமை Don Orione மண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், இத்தாலியக் கொடியேற்றலுடன் ஈகச்சுடரேற்றலுடன், அகவணக்கம், மலர்வணக்கம் இடம்பெற்றது.
மாவீரர் நினைவு சுமந்த இவ்வணக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர் திரு. கனகரவி அவர்கள் சிறப்புரை ஆற்றியதுடன், மாவீரர் எழுச்சி கானங்கள், திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனங்கள், தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. பலெர்மோ மாநகர ஆளுநர் மற்றும் இத்தாலியப் பிரமுகர்களும் பலர் வருகை தந்தனர். இறுதியில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடல் இசைக்கப்பட்டதுடன், உறுதிமொழி எடுக்கப்பட்டு, தமிழீழ மண்மீட்புப் போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் கனவுகளைச் சுமந்தவண்ணம், தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுவணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.

உங்கள் கவனத்திற்கு