இத்தாலி பியல்லாவில் தேசத்தின் புயல்களின் நினைவேந்தல் நிகழ்வு.

தமிழினத்தின் விடியலுக்காக தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 06/07/2025 இத்தாலி பியல்லாவில் நடைப்பெற்றது. பொதுச்சுடரினை கப்டன் ரூபனின் சகோதரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுச்சி கானங்கள், எழுச்சி நடனங்கள் மற்றும் நினைவு உரைகள் இடம்பெற்றது. நிகழ்வின் நிறைவில் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.

உங்கள் கவனத்திற்கு