மே மாத இறுதிக்குள் 4 மில்லியன் Covid-19 பரிசோதனைகள்!

Covid-19 க்கான பிறபொருளெதிரிகளை கண்டறிய sierologici சோதனைகளுக்கான இரத்த மாதிரிகளை மேற்கொள்ளப்படுகிறது

அமெரிக்க மருந்து நிறுவனமான Abbott ஆய்வகம் ஒரு புதிய Covid -19 தொற்றுப் பரிசோதனைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) ஒப்புதல் பெற்றுள்ளது.

மே மாத இறுதிக்குள், இத்தாலியில் 4 மில்லியன் தெளியவியல் சோதனைகளை (Test sierologici) விநியோகிக்க Abbott நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொரோனாவைரசு அவசரகாலத்தில் இத்தாலியில் sierologico சோதனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் அழைப்பை வென்ற இந்த நிறுவனம், புதிய சோதனை முறை மூலம் இத்தாலி முழுவதும் ஆயிரம் ஆய்வகங்களில் ஒரு மணி நேரத்திற்கு 200 சோதனைகள் வரை பகுப்பாய்வு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

தெளியவியல் சோதனைகள் மூலம் வைரசுக்கு பதிலளிக்கும் விதமாக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் பிறபொருளெதிரிகளை (anticorpi) அடையாளம் காண முடியும். அதாவது, இரத்த பரிசோதனை மூலம், அந்த நபரில் வைரசுக்கான பிறபொருளெதிரிகள் உருவாகியுள்ளனவா என்பதை அறியமுடியும், எனவே அவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இந்த சோதனை பல்வேறு மாநிலங்களின் ஆய்வகங்களில் ஆரம்பமாகவுள்ளது. சில குறிப்பிட்ட மக்கள் மாதிரிகளின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

«தொழில் விவரம், பாலினம், ஆறு வகையான வயதுக் குழுக்கள், வாழும் பகுதி அடிப்படையில் Inail மற்றும் Istat ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்த சோதனைகளை நாங்கள் பெருமளவில் செயல்படுத்துவோம். இது முதல் முடிவுகளை அடைய எங்களுக்கு உதவும்».
மேலும், இது கட்டம் 2 இன் முதல் வாரத்திலிருந்து தொடங்கப்படும் என்று கொரோனாவைரசு அவசரகால ஆணையர் Domenico Arcuri தெரிவித்துள்ளார்.

உங்கள் கவனத்திற்கு