ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை தமிழ்த்திறன் போட்டி 2026

தாய்மொழி நாளை முன்னிட்டு அந் நாளினைப் பெருமைப்படுத்தி ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையினால் மாணவர்களுக்கு இடையிலான தமிழ்த்திறன் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடாத்தப்பட்டன. அந்த வகையில் பாடசாலையில் (21/02/2026) சனிக்கிழமை வகுப்பறைச் செயற்பாட்டுப் போட்டி நடைபெற்றது. தமிழர் இல்லத்தில்(22/02/2026) ஞாயிற்றுக்கிழமை 10:30 மணிக்கு மண்டப செயற்பாட்டுப் போட்டி அக வணக்கத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பாடசாலைக்கீதம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டு திருமதி இரட்ணம் சுசிலா ஆசிரியரின் தமிழ்மொழி பற்றிய சிறப்புரையைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தமிழ்த்திறன் போட்டிகள் இனிதே ஆரம்பாமானது.

மாணவர்களுக்கு (Presentazione power point) அளிக்கை மூலம் போட்டி ஆசிரியர்களால் நடாத்தப்பட்டன. தமிழ்த்திறன் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைந்த மண்டபத்தில் பெற்றோர்களுக்கான பொது அறிவுப் போட்டிகளும் ஆண்,பெண் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்டன. பெண்கள் அணிகளே வெற்றி பெற்றனர்.

உங்கள் கவனத்திற்கு