அனைத்துலக மகளிர் நாள் 2026. இத்தாலி மேற்பிராந்தியம் ஜெனோவா
.
அனைத்துலக மகளிர்நாள் 2026
தமிழீழ விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது வெறும் வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, மாறாக அது எதிர்கால தலைமுறைகளுக்கான ஓர் உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. அவர்களின் தியாகங்களும், சாதனைகளும் தமிழ் மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்
சர்வதேச மகளிர் தினமான, மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இன,மத, மொழி, கலாச்சார, பொருளாதார, அரசியல், என எல்லைகளைக் கடந்து பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பெண்களின் விடுதலையை, விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை அம்சமாகக் கருதினார்.தமிழ்ச் சமூகத்தின் பெண்களின் உரிமைகள் மற்றும் கௌரவம் பற்றிய புரிதலை மாற்றியமைப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிக முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த நாளினை வரவேற்று இத்தாலி மேற்பிராந்திய மகளிர் அமைப்பினரால் ஜெனோவா மாநகரில் (08/03/2026) ஞாயிற்றுக்கிழமை பல்லின மகளீர் அமைப்புக்களுடன் இணைந்து சிங்கள இனவாத அரசுகளின் இன அழிப்பில் தமிழீழப் பெண்களுக்கு மேற்கொண்ட கொடுமைகளை வெளிப்படுத்துவதோடு பல்கலை எழுச்சி நிகழ்வுகளுக்கும் நடைபெறும். தமிழர் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றான விருந்தோம்பலுடன் தமிழர் இல்லத்தில் ஆரம்பமாகும். பல்லின மக்களையும் உள்வாங்கி வரவேற்று விழிப்புணர்வுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நடாத்தப்படவுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
இத்தாலி மேற்பிராந்திய மகளீர் அமைப்பு




